Friday, June 27, 2014

The Garland of Guru's Sayings - Selections 7

Turning Inward - Section 7: Ignoring, turning one’s attention away from the world and towards Awareness watching Awareness (108 sayings)

Source: English translation and the highlights as in 
http://www.albigen.com/uarelove/muruganar_the_world.htm

1. சுத்த மோனத்துச் சுடர் விட்டு ஒளிர், சொருபப்
புத்தமுது ஆர்ந்து உள்ளம் மகிழ் பொங்குவோர், சித்த மயல்
சேர்ந்த உன்மாதச் சிறு களி சேர், புன் புலத்தை
ஓர்ந்து உலகத்து ஊழ்த்தல் உறார்.   (1202)

ஊழ்த்தல் - கெடுதல்.

1. Those in whose Heart, pure silence shines, and the perennial, blissful nectar of Self-Awareness overflows, will never look at or get lost in this world, and its false, trivial, maddening pleasures.   (1202)
------------------------------

2. ஐ உணர்வால் காணும் அகிலம், மெய்யா நம்பி
நொய்ய புலன் மேல் பாயும் நோக்கத்தால், மையல்
உருப் பாரைப் பற்றும், உயிர்ச் சேட்டை அற்றுச்
சரிப்பார்க்கு, வேண்டா தவம்.   (1096)

நொய்ய - அற்ப; உருப் பார் - நாம ரூப உலகம்; சரிப்பார்க்கு - நடப்பவர்க்கு.

2. Those whose five senses no longer turn towards the world, which once seemed real, those who have learned to live without their mind being moved by the illusive universe of forms, they need perform no penance.   (1096)
------------------------------

3. ஓரா  இடத்து உளதாய், ஓர்க்கும் இடத்து இல்லாத,
பார் ஆதி ஆய பகிர் அண்டம் ஓராதே,
ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின், ஒரு தலையாப்
பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு.   (749)

ஓரா - ஆராயாத;  ஓராதே - கவனிக்காது; ஒரு தலையா - ஒரு முகமா; பேர்த்து - மாறி; உள்ள வேண்டா - நினைக்க வேண்டாம்.

3. The universe out there appears when not scanned. When scanned the universe disappears. Turning away from this, search keenly for the Self-Awareness within the Heart, and think no more of birth.   (749)
------------------------------

4. காட்சியும் கேள்வியும், காணும் பரிச்சின்ன
மாட்சி உடைய பிரமாதாவும் வீழ்ச்சி உறும்,
அத்துவித ஞான அபரிமித பூமாவே,
சுத்த உபசாந்த சுகம்.   (1006)

4. Non-dual infinite Awareness, where the error of seeing, hearing, and knowing various objects has been destroyed, this is the purest bliss supreme.   (1006)
------------------------------

5. அகமும் பொய், அல்லா இதமும் பொய், அந்த
அகம் இதத்தை காணும் அறிவும் மிகவும் பொய்,
முப்புடியும் தோற்றல் உறு மூலப் பகுதியும் பொய்,
அற்புதச் சிற்றம்பலமே மெய்.   (1017)

5. The "I" is false; "this world" is false; the seeing of "this world" by "I" is false. The primal ignorance of illusion is also false. The sole reality is bright, marvelous inner space, Being-Awareness.   (1017)
------------------------------

6. சுட்டறிவு முற்றும் தொலைந்தால் அல்லாது, உயிரைக்
கட்டு புலக் கட்டு உலகக் கட்டு அறார், நிட்டையாம்
ஆன்ம நிலை நிற்றலால், அவ் அறிவு பொன்றலே
தான், மகிழும் முத்தித் தரம்.   (1224)

கட்டு - சேர்க்கை.

6. Unless there is a final end of the so called "knowledge" of things out there, one cannot gain release from bondage to the sense-created world. This "knowledge" being destroyed by firm abidance in Self-Awareness, what remains is the supreme bliss of liberation.   (1224)
------------------------------

7. வேனில் எறி உண்ட விவேகி, நிழல் விட்டு
வேனில் உற மீளா விதம் போல, வேனில்
உலகு அடும் முத்தாபம் உழந்தோரும், உளம் விட்டு
உலகு அடைய மீள ஒணாது.   (630)

மீளா - திரும்பாது; அடும் - வருத்துகின்ற.

7. Having felt the sun's fierce heat, the wise one stays in the shade, and those who know the fire raging in the world, will never leave the Heart and turn again towards the world.   (630)
------------------------------

8. பார்ப்பானைப் பாராமல் பார்க்கப்படு பொருளைப்
பார்ப்பதனால், என்றும் பரிதவிக்கும் பார்ப்பாரே,
நும் தம் புறமே நீர் நோக்காது, உள் நோக்கித்
தொந்தம் அறுத்தல் சுகம்.   (186)

உள் நோக்கி - பார்ப்பவனைப் பார்த்து; தொந்தம் - இருமை உணர்வு.

8. Poor seer suffers endlessly, because you still perceive the object, not the subject, please look inward, not without, and taste the bliss of non-duality.   (186)
------------------------------

9. பொய் ஆம் அராத் தோற்றம் போம் காறும், ஆதார
மெய் ஆம் பழுதை விளங்காது, பொய்யா
மருவும் உலகத் தோற்றம் மாறு அளவும், உண்மைச்
சொருப அதிட்டானமும் தோற்றாது.   (876)

அரா - அரவு, பாம்பு.

9. Until the snake illusion goes, its ground, the real rope, will not be recognized. Until the world of false phenomena disappears, the Self-Awareness, its ground will not shine clear.   (876)
------------------------------

10. உலக உணர்ச்சி ஒழிந்த பொழுதே,
குலவு பரம ஆன்ம ஒளி கூடும், குலவு ஆன்ம
சோதி சேர் வாழ்வே சுபாவ வாழ்வு, ஆர் உயிர்க்கு
மீத உள எல்லாம் இறை.   (877)

இறை - அற்பம்.

10. Only when the world illusion goes,  does the blissful light of Self-Awareness arrive. Life lived in this bright, blissful light, is our true natural life. Other ways of life are full of trouble and fear.  (877)
------------------------------

11. படல் ஆம் உலகைப் படாது ஆய், முழுதும்
விடல் ஆய தன்னை, விகாரப் படலாய்
மயங்கி உழலும் மயக்கத்தின், மேலும்
மயக்கும் உளவோ பிற.  (905)

படல் ஆம் - புலப்படுகின்ற; படாது ஆய் - புலப்படததாய்; விடல் ஆய - விட வேண்டிய; விகாரப் படலாய் - விகாரப் படுவதாய்; மயக்கத்தின் - மயக்கத்தை விட.

11. Is there a greater foolishness, than the aching foolishness, of supposing that the Self, the "I" of pure Awareness, which does not see this changing world at all, is subject to some change.   (905)
------------------------------

12. விடயம் கத்தாவில் விளியுங்காறு, ஆன்ம
திட உண்மை இற்று எனத் தான் தேருங்காறு, அந்த
இறை நான் இறை நான்என, வாளா வாயால்
பறைதலால் என்னோ பயன்.   (708)

விளியுங்காறு - அழியும் வரை; இற்று - இப்படிப்பட்டது; தேருங்காறு - தேரும் வரையில்; வாளா - சும்மா; பறைதல் - சொல்லுதல், கத்தாவில் - கர்த்தா ஆகிய தன்னில்.

12. Until in the seer's awareness objects disappear, until firm and clear, one knows the truth of Self-Awareness, what use is it to mouth in vain the words "I am God", "I am God".   (708)
------------------------------

13. பற்பல உள் சிற் சிலவும், பார்ப்பானை அன்றி இலாச்
சொற்பனமே ஆகத் துணிவு உற்றுக், கற்பனை ஆம்
நாம ரூப உலகத்தை நாடாது, அறிவு உரு ஆம்
ஏமப் பொருளையே எண்.   (293)

ஏமம் - சிதானந்தம்.

13. Know that these countless things are pictures in a dream, and none is real, apart from the beholder. Shun this phantom world of names and forms, and dwell in the pure, blissful being of Awareness.   (293)
------------------------------

14. அயல் ஆயவற்றை அறிகின்ற, புத்தி
மயல் ஆய விஞ்ஞானம் மாற்றி, இயல் ஆய
செம்மை இதயத்தைச் சேரவே, சித்தம் ஆம்
அம் மெய் அறிவு ஆனந்தம்.   (971)

14. When the intellect, withdrawn from questing after outer objects, returns to its own natural home, the Heart, out Being-Awareness-Bliss, restored to us, abides forever.   (293)
------------------------------

15. கானல் நீர் வையமும், அக் காசினியைக் காண்பனும்,
பானம் ஆர் கண்களின் பார்வையுமாய், ஆன தனை
எச்சம் அறச் சுட்டக்கால், எஞ்சியதைக் காண்டலே
விச்சை, மற்று அல்ல பிற.   (337)

15. Awareness which survives, when all illusions, the mirage-like world, he who beholds it and the sight his eyes drink in, are destroyed without a vestige, this Awareness, this and nothing else, is Knowledge.   (337)
------------------------------

16. இயல் சொருப உண்மை இனைத்து என, உய்த்து ஓரார்
அயல் வடிவா மோகித்து அழிவார், மையல் படா
ஏக சத் சித்தா இயல்வது அன்றி, மற்று அனைத்தும்
சாகச மா மாயைத் தரம்.   (430)

உய்த்து ஓரார் - ஆராய்ந்து அறியாதவர்கள்; சாகசம் - பாசாங்கு; தரம் - தன்மை.

16. Those who have not searched and found the truth of their own natural Being, will perish, deluded by alien forms. Live as one sole Being-Awareness. Everything, except for this, is false appearance, the realm of illusion.   (430)
------------------------------

17. அன்னியம் ஒன்று இன்றி, அனைத்துமே தான் ஆகும்
தன் இயல்பாம் பூன்றத் தலைப்பாட்டால், என் இயல்பு
ஏது என்னத் தன் உள்ளத்து இயையாது, உணர்வு உறு உம்
பின்ன உணர்வு எல்லாம் பிழை.   (549)

பூன்றத் தலைப்பாடு - பரிபூரண ஐக்கியம்; இயையாது - நிட்டை உறாது.

17. When the full identity is reached, the Self-Awareness is all, and there is no "other", the various common perceptions, in the absence of self-inquiry and Self-Abidance, are all seen as mere mistakes.   (549)
------------------------------

18. மயல் கொண்ட ஆற்றால், மனோ மயத்தை நம்பி,
இயல் உண்மை ஆக எதிர்ந்தே, வியன் முதல் ஆம்
சுத்த ஞான ஆன்ம சொரூபத்தைச் சோர்ந்தான், உன்
மத்தன் ஆகின்றான் மதி.   (611)

இயல் - விளங்குகின்ற; எதிர்ந்தே - எதிர்ப்பட்டு; வியன் - ஆச்சரியகரமான; உன்மத்தன் - பைத்தியகாரன்.

18. Seeing this mind-projected world is sheer delusion, then taking it as real, and swerving, from the sublime truth of one's own Being as pure Awareness, one but proves oneself insane.   (611)
------------------------------

19. தோற்றத்தை மெய்யாத் தொடராதே, காண் சொருபத்
தேற்றத்தை நீங்கித் திகைத்து நீ, தோற்றம்
கரப்பதால் மெய் அன்று, காண்பான் சொரூபம்
கரப்பது அன்று, மெய் அதுவே காண்.   (25)

தேற்றம் - அறிவு; கரப்பது - மறைந்து போதல்.

19. Alienated and deluded form your true being as Awareness, do not pursue appearances, deeming them as real. They are false, since they must disappear. Your own being as Awareness is real, and cannot cease to be.  (25)
------------------------------

20. உள்ளது ஆம் தானே உணர்வு ஒளியாய், உள்ளத்து உள்
தெள் என்று அகமாத் தெரிதலால், கள்ளம் இலாக்
கண் ஆம் அச் செம் பொருளே கண் கூடு ஆம், கண் புலத்து
நண்ணும் விடயம் அன்று நாடு.   (643)

கண் கூடு ஆம் - பிரத்யக்ஷமாம்; நாடு - தெரிந்து கொள்.

20. The Self, the sole Reality, the light of pure Awareness, shines clear as "I", "I" in the Heart. This dear, dear Being, directly known, alone is true, not the things perceived by the eye and the other senses.   (643).
------------------------------

21. உடலின் உலகின் உவர்ப்பு எப்போழ்து உண்டாம்,
உடனே துறத்தல் உறுதி, அடல் சேர்
உறுதி மேற் கொண்ட உயிர்க்குத், தம் வாழ் நாள்
அறுதி இடல் அருமையால்.   (829)

அடல் - வல்லமை, ஆற்றல்; அறுதி இடல் - எல்லை இட்டுக் கூறல்.

21. Even the strongest willed aspirant, does not know how long his life will last. Hence, when you feel the body and the world turn sour, renounce them all at once.   (829)
 ------------------------------

22. நிலையாமை கண்டு அறிந்த நெஞ்சத்தால், புத்தன்
தொலையாத செல்வம் துறந்தான், புலன் ஆம்
உலகம் நிலையாமை உணர்ந்த உளத்தோன்,
இலவுகிகன் ஆதல் அரிது.   (833)

தொலையாத செல்வம் - பெருஞ் செல்வம்.

22. Seeing how transient the world is, Lord Buddha gave up wealth and kinship. When one has seen how false and fleeting that which is perceived by the senses is, how can one still be worldly-minded?   (833)
------------------------------

23. அச்சமே காணாப் பேர் ஆண்மையால், இவ்வுலகைத்
துச்சமா எண்ணித் துரந்தோரே, நிச்சயமாய்
மெய்ப் பொருள் காண்கிற்கும் வித்தகர், மற்று ஏனையரோ
பொய்ப் பொருள் காண் புல் அறிவினர்.   (834)

காண்கிற்கும் - காணும்.

23. Courageous ones, who know no fear, renounce the world, and find the world to be worthless, and so gain true wisdom. Others are foolish folk, blinded by falsehood.   (834)
------------------------------

24. இல்லாமல் உள்ள உலகை, இருந்துமே
இல்லாததாக் கை இகத்தலே, இல்லாது
போன்று ஒளிரும், போதப் பொருள் ஆய தன் நிலையை
ஆன்றோர் அடைதல் என்பார்.   (835)

கை இகத்தலே - கைவிட்டு விடுவதே.

24. Renouncing this phenomenal world, which seems to, but does not exist, we gain (the great ones say), the Self, the shining, unseen, Awareness.   (835)
------------------------------

25. விடற்கு இயல்ப எல்லாம் விடப்பட்ட பின்னர்,
விடற்கு இயல்வது அன்றி எது விஞ்சும், விடற்கு இயலா
உள்ள, மா உள்ளத்து ஒளிர் சொருப உண்மையே,
வெள்ளம் ஆம் இன்ப விளைவு.   (836)

25. After we have renounced whatever can be renounced, That which abides, and cannot be renounced, is True Being shining in the Heart, the fount, the flood of Bliss.   (836)
------------------------------

26. விஞ்சையாத் தோன்றும் வெறும் பொய் உலகத்தைத்,
தஞ்சமாத் தான் பற்றித் தாழாது, நெஞ்சால்
துறந்து, புளிம் பழத்து ஓடு போல் தோய்ந்து,
மறந்து கிடப்பே மதி.   (825)

விஞ்சை - ஆச்சரியம்; தோய்ந்து - பொருந்தி.

26. The tamarind fruit grows unattached to its dry shell. Even so, the wise renounce at heart, and quite forget the wondrous charms of this false world, which only ruins those who trust it.   (825)
------------------------------

27. உலகுணர்வு ஒன்றோ, அதனோடு ஒட்டாதும், தானே
இலகு பர உண்மை உணர்வேயும் குலவி,
மல வன்மை மாய்ந்த மன மாந்தரே, மன்ற
உலகு உண்மை அர்த்தம் உணர்வோர்.   (51)

27. Only those who have utterly renounced the world and all attachment, and rejoicing in Self-luminous Awareness, have minds pure and free from illusion's power only they know the sense in which "The World is Real".   (51)
------------------------------

28. அவற்றை அகம் ஆக அபிமானித்த, ஆதித்
தவற்றை விவேகத்தால் தடிந்து, கவற்று உலக
ஊனம் உராத்துனைத் தேர்ந்து ஆகத், தனித்து ஒளிர் மெய்ஞ்
ஞான சொரூபமே நான்.   (673)

தடிந்து - அகற்றி; கவற்று - ஏமாற்றுகின்ற; ஊனம் - ஸ்தூலமான உடல்; உராத்துனைத் தேர்ந்து ஆக - கானல் நீராகவே பொய்யாய்ப் போன பின்.

28. Destroying through discrimination, the basic error that I am the body, an object, and rejecting it, and the world as mere false mirages, the surviving Awareness that shines alone as Being, That I am.   (673)
------------------------------

29. யாவுமே தோற்றும் இட அறிவு ஆம் தன்னைத், தான்
ஆய்வு மேலிட்ட அமைதியிலே, சோர்வு மேல்
இட்டு நிலை கலக்கம் எய்தாமே, யாவையும் தான்
விட்டு விடுதலே வீடு.   (1223)

29. Firm, steady abidance in the serene peace gained by the quest for the Self, the Awareness, the sole ground supporting all appearances, and the consequent relinquishment of all objects as unreal, this alone is liberation.   (1223)
------------------------------

30. தன்னை உடலாத் தடுமாறும் புந்தியே,
துன்னும் பெயர் உருவத் தோற்றமாம் மின் உலகை,
உண்மை போல் வேட்பித்து, உறு பாச பந்தத்துள்
துண் என்று அகப்படுத்தும் சூது.   (34)

துன்னும் - பொருந்துகின்ற; மின் - கணம் மட்டும் தோன்றுகின்ற; வேட்பித்து - ஆசைப்படுத்தி; உறு - வலிய; துண் என்று - திடீரென.

30. The bewildered mind, which mistakes the body for oneself, conceives the transient world of name and forms, makes it seem real and lovable, and promptly entraps one in the strong, illusive bondage of desire.   (34)
------------------------------

31. உலகத்தைப் பாழில் ஒடுக்கும் முகத்தால்,
உலகக் கலக்கம் அற ஓட்டி, உலகம் தீர்
பாழை விடயமாப் பார்ப்பான், சொரூப அறிவு
ஆழியின் அப் பாழை அழி.   (60)

பாழில் ஒடுக்கும் - அறவே ஒடுக்கும்; ஓட்டி - செய்து; தீர் - நீங்கிய; பாழ் - சூன்யம்.

31. With mind turned inward, drown the world in the great void and dispel illusion. Beholding then the void as void, destroy the void, by drowning it in the deep ocean of Self-Awareness.   (60)
------------------------------

32. உலக ஆசரணைக்கு உவகையோடு, ஆட்டின்
அலை தாடியா வீண் அலைவார் நிலை, ஆன்ம
மோக்க ஆசாரம் முனிவார் திறன், அந்தோ
பார்க்கல் ஆகாப் பரிதாபம்.   (71)

32. How piteous is the spectacle of people wandering aimless in the world's ways, and ignoring the discipline that leads to permanent freedom.   (71)
------------------------------

33. எதிர்ந்த உலகு ஏதப்பாடு எய்துவித்தல் எண்ணாது,
இதம் தரு மெய்யாப் பற்றியிட்டார், மிதந்த
உளியம் புணை எனக் கொண்டு ஊர்ந்தால் போல், ஆழ்ந்து
விளிவர் பிறவி வெளத்து.   (128)

எதிர்ந்த - தன் முன் இருக்கின்ற; ஏதப்பாடு - கேடு; உளியம் - கரடி; புணை - தெப்பம்; ஊர்ந்தால் - மிதந்து சென்றால்; விளிவர் - அழிவர்.

33. Those who forget the harm the false world does, and cling to it as real and comfortable, mistake a floating bear for a boat, only to be crushed and drowned in the sea of births.   (128)
------------------------------

34. உடம்போடு உலகை உறுதி எனப் பற்றி,
மடம் படுவோன் சாந்தி மடுத்தல், மடம் பேர்ந்து,
உடும்பு போன்று உள்ளத்து உயிர் நிலை உற்று ஓவான்,
இடும்பை உறல் என்றும் இல.   (130)

மடம் படுவோன் - அறிவு அற்றவன்; மடுத்தல் - அடைதல்; பேர்ந்து - விட்டு; ஓவான் - விட்டு நீங்காதவன்.

34. When will the fool, who thinks the body and the world are permanent and cling to them, find peace? Only when this foolishness leaves him, and like a limpet, he clings to that Self-Awareness within. From then on, he shall never know pain.   (130)
------------------------------

35. உளப்பாடு சான்ற உயிர் ஓவியத்தில், தெய்வ
வெளிப்பாடு என்று ஆன்றோர் வியப்பர், களிப்பால்
மிகத் தீமை செய்யும் பல் வேறு எழில்கள் போலாது,
அகத் தூய்மையே மெய் அழகு.   (245)

உளப்பாடு - உண்மை; சான்ற - மிகுந்த; உயிர் ஓவியம் - மனிதன், புருடன்.

35. The world's many and various bright objects, give pleasure, only to bring grievous evil. Unlike these, inner purity alone has true beauty. Hence, the wise regard and marvel at the sage, the living embodiment of truth, as God made manifest, here on this earth.   (245)
------------------------------

36. பன்னற்கு அரிய பரமகுரு இன் அருளை,
உன்னற்கு உரியபடி உன்னியே, முன் நிற்கும்
பொய்ம்மாயத் தோற்றப் புணர்ப்பில் புகுதாது,
சும்மா இருப்பே சுகம்.   (288)

பன்னல் - சொல்லுதல்; புகுதாது - புகாது.

36. Grasping aright the ineffable grace of the supreme Teacher, being unentangled in the illusory world that stands in front, abidance in mere Being, is true bliss.   (288)
------------------------------

37. எதனை மறந்ததனால் இவ் உலக மாயை,
மதன் உடைத்து ஆய்த் தன்னை மயக்கிற்று, அதனை
அறிந்தாலே அன்றி, அணு அளவும் துன்பம்
இறந்து ஒழிதல் என்பது இலை.   (368)

36. What is That, forgetting which, we have fallen under the powerful spell of this false world? Unless we know That, the Real; there is no chance for the death and disappearance of our pain.   (368)
------------------------------

38. ஒன்றன் மேல் ஒன்றை உறுதி என, மேல் மேலும்
சென்று ஓடி நாடும் செகத்தீரே, ஒன்று ஆய
எப் பொருளை ஆய்ந்தால், வேறு எப் பொருளும் இன்று ஆமோ,
அப் பொருளை ஆய்தல் அறிவு.   (536)

நாடும் - விரும்பும், ஆராயும்; ஒன்று ஆய -ஒன்று ஆகிய.

38. O worldly folk, who long for and run after an endless series of temporary things, it is true wisdom to seek and know That one thing, on knowing which all other things will cease to be.   (536)
------------------------------

39. ஆன்ம சொரூபத்தை ஆற்ற உணர்ந்து, அன்னியத்தைச்
சூனியமாகக் கை இகந்து சோர்தலே ஞானம் ஆம்,
காலமொடு தேயம் கடந்தவும், மற்று ஓர் கருத்தும்,
சால உணர்வு அன்று சதுர்.   (538)

கை இகந்து சோர்தலே - கை விட்டு ஒழிதல்; தேயம் - தேசம்; சால - சிறந்த; சதுர் - சாமர்த்தியம் வாய்ந்தது, தக்கது.

முக்கால தேச திருஷ்டியும், பிறர் கருத்து அறிதலும் சிறந்த ஞானம் ஆகாது.

39. Knowing aright the nature of Self-Awareness, and abandoning the non-self as void and unreal, is true wisdom. All other knowledge is ignorance, and not wisdom.   (538)
------------------------------

40. மன வெளியின் கண் அம் மனக் கற்பனையால்,
கனவு என வந்து எய்துவது ஓர் காட்சி எனவே,
திடம் கொண்டு சுட்டு அறிவைச் செற்று, விடய ஆசை
மடம் கொன்று நிற்றலே மாண்பு.   (550)

ஓர் காட்சி - இந்த நனவுக் காட்சி; செற்று - அழித்து.

40. Like a dream, this "waking" world is but a mind conceived appearance in mind space. Hence, greatness lies, in firmly ending indicative knowledge, and the foolishness of fondness for outer objects.  (550)
------------------------------

41. கற்பிதத்தைச் சுட்டிக் கலங்காது, நெஞ்சே நின்
உற்பவத்தைச் சுட்டி உளம் புகுதாய், சித்பரத்தில்
யாவுமே தானா இயல், கேவல அத்துவிதம்
மேவுமே, நின் சொருப மெய்.   (785)

உளம் புகுதாய் - உளம் அடைவாயாக; இயல் - விளங்கும்.

41. O heart of mine, instead of being confused by this conceptual world, enter within, and seek the source. Then in the realm of pure Awareness, you experience sheer non-duality, where the one Self-Awareness, shines as all things.   (785)
------------------------------

42. ஆன்ம ரசம் ஒன்றே அதிரசம் என்று ஆய்ந்து, அதனால்
ஆன்ம நிலை நின்றார் அறிவு உடையார், ஆன்ம சுகம்
ஒன்றா உயர்ந்த உறுதி என்று ஓராதார்,
நின்றார் உலக நிலை.   (1027)

42. Having found that Self-relish is the highest bliss, the wise abide as Self-Awareness alone. But those who do not know that the sole, certain, supreme bliss is in Self-Awareness alone, they stay forever worldly-minded.   (1027)
------------------------------

43. தம் தம் உரு இன்பம் எனத் தாம் உணர மாட்டாரே,
கந்த மிருகம் போல் கலங்குவார், தம் தம் உரு
நன்றாய் உணர்கிற்பார், ஞாலத்தை நாடாது
நின்றார் தமது நிலை.   (1028)

கந்த மிருகம் -கஸ்தூரி மான்.

43. Those who cannot see that Bliss is their own Self-nature roam bewildered like musk deer in the forest. Those who have known the Self-Awareness, instead of wandering in the world, abide in their own natural state.   (1028).
------------------------------

44. குறிக் கொண்டு ஒழுகக் குலவுவது, சுத்தத்
துறக்கம் ஆம் போத சொரூபம், மறக்கம் இலா
ஒர்மையால் உள்ளத்து உபாசித்துத், தான் அதுவா
நேர்மை உறல் வாழ்க்கை நிறைவு.   (1094)

சுத்தத் துறக்கம் - பேரின்பம்; மறக்கம் - மறதி.

44. The only goal worth seeking is the supreme bliss of Self-Awareness. Constant remembering and abiding as That, within the Heart, amounts to completeness of life.   (1094)
------------------------------

45. அருள் வாழ்க்கையே செம் பொருள் வாழ்க்கை, அல்லா
மருள் வாழ்க்கை காண் உலக வாழ்க்கை, வெருள் வாழ்க்கை
வாழ்வது என்ன மாயம், மனோ மாயா விலாசத்தூடு
ஆழ்வதே அன்றோ அது.   (1095)

45. Such a life of Grace alone, is life lived in full, real Being. This worldly life of false phenomena, full of fear, is sinking deeper in illusion, not authentic living.   (1095)
------------------------------

46. சொருபம் தனில் துயில் அறிஞன் சித்தம்,
பருவந்து பாழ்படான் பாரில், சொருப
நிருவிகற்ப மோன, நிரதிசயானந்தப்
பரவையில் பேராது படிந்து.  (1154)

பருவந்து - துன்புற்று; பரவை - கடல்.

46. The sage abiding in Self-Being, asleep and yet awake, immersed in the still, deep, immutable ocean of supreme bliss, will never lapse back into this ruinous world and suffer.   (1154)
------------------------------

47. சுட்டு உணர்வால் தன் முன்னர்த் தோற்றும் பிறவற்றைச்,
சுட்டு உணர்வால் ஏங்கிச் சுழலாதே, துட்ட மனம்
சுட்டு உணர் நான் ஆர் எனத், தன் சுட்டி உசாய்த், தன் மெய்க் கண்
நிட்டையே உண்மை நிலை.   (1023)

தன் மெய்க் கண் - தன் நிஜ சொரூபமான ஆன்மாவில்.

47. When the villainous mind, instead of being bewildered by objects appearing there without, looks inward, questing "Who am I?", and rests firmly in its ground, the Self-Awareness, this is our true, authentic Being.   (1023)
------------------------------

48. அவ் அறிவு ஆம் மெய்யே நீ ஆய் இருக்க, அவ் அறிவால்
அவ் அறிவே நீயா அமையாமல், அவ் அறிவு ஆம்
உன் நின்று எழுந்த உலகியலை ஓர்ந்து அழிதல்,
என் என்று உரைப்பேன் யான்.   (429)

48. While in truth you are that Awareness, you do not abide as such, but suffer, since you only recognize this worldly life alone, which rises from yourself, this sole Awareness. How shall I describe this foolishness?   (429)
------------------------------

49. அகந்தை மனப் பான்மை சேர், அற்ப உயிர் வாழ்க்கை
உகந்தார், மகத்தா உளத்து முகந்து கொள,
எல்லை இல் பேரின்ப இயல் பர வாழ்வு, உள்ளதனை
இல்லையே போல இகந்தார்.   (127)

உகந்தார் - மேற் கொண்டவர்; முகந்து கொள - அனுபவிக்க; இயல் - சத்; இகந்தார் - துறந்தார்.

49. Those who desire, like, and live, the trivial life the ego knows, reject, as if it were unreal, the natural life of infinite bliss within their own hearts, ever present for their enjoyment.   (127)
------------------------------

50. அகந்தை வாழ்வு ஆன அசத் காரியத்தை,
மகிழ்ந்த உயிர் சிந்தை மிக மாழ்கும், அகந்தை தீர்
ஆன்ம சொரூப வாழ்வு ஆன, அருள் சித் பரமே
தான் மகிழ வேண்டுவது தான்.   (131)

உயிர் - மக்கள்; மாழ்கும் - கெடும்; தீர் - அற்ற; தான் - ஒருவன்.

50. Those who enjoy the ego's life of false phenomena, perish and die. The state of grace, supreme Awareness, the life lived in Self-Being, this alone is the bliss worth seeking.   (131).
------------------------------

51. புன் புலமே சுட்டல் உறும் புத்தி, நான் ஆர் என்று
தன் புலமே சுட்டத் தலைபடலே, முன் பார்
குறி குணமே சுட்டிக் குலைந்து அழுங்கும், தன் சுட்டு
அறிவு தன்னுள் செறியும் ஆறு.   (185)

சுட்டல் உறும் - காண்கின்ற; முன் பார் - முன்னிலையில் உள்ள; அழுங்கும் - துன்புறும்; செறியும் - நிட்டை உறும்.

51. How to make the mind, which now looks painfully, at forms and features without, turn inward? By asking who is this "I", this mind, which sees this trivial world, and thus directing it towards the Self-Awareness.   (185)
------------------------------

52. சித்த சங்கோசச் சிறுமை சேர் புன் மதியின்,
மத்த அகங்கார மயல் வாழ்விலே, சித்தம் ஒன்று
உள்ளல் அற்று உள்ளது, ஓர் ஒட்பம் கூர் உண்மை மகிழ்வு,
உள்ளவர் யாரே உரை.   (454)

சங்கோசம் - சுருங்குதல்; ஒன்று உள்ளல் அற்று - ஒரு எண்ணமும் எண்ணாமல்; ஒட்பம் - பிரகாசம், தெளிவு.

52. In the false, frenzied ego life, created by the mind, constricted to some thought, who can enjoy the clear, bright, bliss of pure Awareness, free from thought.   (454)
------------------------------

53. உள்ளும் புறம்பும் அனைத்து ஊடும், அவற்றோடு
எள் அளவும் பற்றாது இயல் விசும்பை எள்ளும்,
அசங்கனாத் தன்னை அறிந்தால் அன்றி, மோக
வசங்கதன் ஆகாமை அரிது.   (911)

எள்ளும் - சமமான; மோக வசங்கதன் - மோக வசப்பட்டவன்.

53. Within, without, and through and through all objects, the ethereal sky is present and yet is bound or affected by none. And unless one knows one's Self as the pure transcendent Self-Awareness, one cannot but get caught in the world's illusive bonds.   (911)
------------------------------

54. வாழ்வதே எண்ணுகின்றீர், வாழ் வகை எது என்று ஓரீர்,
பாழ் வளர் மயக்கத்து ஊடு, பகல் கனாக் கண்டு, நீவிர்
தாழ்வதே வாழ்வா எண்ணித், தருக்கியே செருக்குகின்றீர்,
பாழை ஊடுருவிச் சென்று, பற்றிடீர் உண்மை வாழ்வே.   (1089)

54. You desire life. But you do not know how to live. Thinking that sinking in this deep, void, vain, illusive walking-dream is "life", you proudly claim you "live". Pierce this illusion, go, grasp the Truth, eternal life.   (1089)
------------------------------

55. திகந்தம் எலாம் சுற்றித் திரிந்து, படர் உற்றும்
இகம் தனிலே மாழ்கல் அறிவீனம், அகந்தை
தரும் அசைவு மாய்க்கும் சதா சிவம் ஆம், மோனப்
பரம சிவன் பாதம் பயில்.   (1103)

திகந்தம் - திசைகளின் முடிவு, எல்லை; படர் - பிரிதல்; இகம் - இவ்வுலகம்; பயில் - அநுசந்தானம் செய்.

55. It is foolishness to waste one's life running in all directions, searching different goals. Learn to practice firm abidance in Self-Awareness, the eternal and auspicious silence, which alone can still the ego's restlessness.   (1103)
------------------------------

56. அத்துவித பூரணத்தே, ஆழ்ந்து அமிழ்ந்த சித்தத்தோர்,
பொய் துவித வாழ்வில் புலம்பு உறார், சுத்த உணர்வு
ஆன சொரூப அருட் பரத்தே, அது அன்றி
யான் இது என்று ஒன்றும் இலை.   (1117)

புலம்பு - மயங்குதல்.

56. Those whose minds are merged and lost in one non-dual fullness, will never be bewildered by this false, phenomenal life. In that blessed, supreme state of Being pure Awareness, That exists alone without and "I" or "this".   (1117)
------------------------------

57. தொடர்பு அரிந்த கத்தத்துவத்தாலே, ஞானி
கடவதாச் செய் கன்மம் காணான், சடம் ஆம்
அயல் அணுவும் தோற்றா அறிவாலே, ஐயம்
மயல் அணுவும் தோற்றாது மற்று.   (1118)

அரிந்த - அறுக்கப்பட்ட.

57. The sage whose knot of doer-ship has snapped, fins no more "duties" to discharge. In his Awareness there is no other and no objects, hence no doubt and no delusion.   (1118)
------------------------------

58. ஒளித்த கடலுள் சிந்தை ஒன்றிக், கல்லோடு
குளித்து, உயர் நல் முத்தைக் கைக் கொண்டு களித்து ஆங்கு,
இதயத்துள் வைராக்கியத்தோடு ஆழ்ந்து, ஆன்ம
நிதியத்தைப் பெற்று, அவலம் நீங்கு.   (1067)

58. As the pearl fisher, with single thought, weighted with a stone, dives deep into the sea and grasps the pearl most precious, and rejoices, dive into the Heart with stern non-attachment, gain Self-treasure, and so end all suffering and sorrow.   (1067)
------------------------------

59. உய்ந்து போவாருக்கு உறுதி உரைக்குங்கால்,
ஐந்தும் அகப்படுக்கும் ஆமை போல், ஐந்தும்
அடங்கி ஒடுங்கி, அகம் நோக்கிச் சிந்தை
மடங்கி இருப்பே மகிழ்வு.   (291)

59. For those who seek eternal life, the assurance stands: the five senses retracted like a tortoise, the mind turned home-ward to the Self-Awareness, and there abiding, is pure bliss.   (291)
------------------------------

60. கற்று ஆங்கு ஞானம் கடைபிடித்துப், புன் புலம் ஆம்
மற்று ஆங்குச் சிந்தை வழுவாது, தேற்றமோடு
உண்மை ஒளியால் உள் ஒழுகும் ஒழுக்கமே,
உண்மை உபதேசம் உணர்.   (327)

கற்று ஆங்கு - கற்றபடி; மற்று ஆங்கு - மற்ற திசையில்; தேற்றம் - தெளிவு.

60. Steadfast clinging to the wisdom learnt, the mind restrained and withdrawn from the field of the false senses, living within, in the clear light of truth, such practice is the only true teaching.   (327)
------------------------------

61. வெள்ளமாய்த் துன்று விடய போகங்களை விட்டு,
எள் அறிவால் என்ன பயன் என்பீரேல், உள்ளத்து
இடைவிடாது என்றும் இயல், சொருப சாந்தி
நடைபெறல், மெய்ஞ்ஞான நலன்.   (77)

வெள்ளமாய் - அளவு அற்றனவாய்; துன்று - உள்ள; எள் - வெறும், இகழத்தக்க; நடைபெறல் - அனுபவிக்கப்படுவது.

61. What does one gain, you well may ask, by giving up the "immense wealth" of worldly pleasure, and seeking only "mere" Awareness? The benefit of true Awareness is the unbroken prevalence of peace within the heart, the bliss of one's own natural being.   (77)
------------------------------

62. துர்க் குணங்கள் யாவும், தன் சோர்ந்த பிரமாதம் ஆம்,
பொய்க் களியே மூலமாப் பூத்தலால், அக் களி மால்
சேர்ந்த அகந்தை சிதைந்த, மெய்ஞ்ஞான உப-
-சாந்தமே சத் குணச் சால்பு.   (331)

தன் சோர்ந்த - ஆன்ம நிஷ்டையில் இருந்து தவறுகின்ற; பூத்தலால் - உண்டாவதால்;  சால்பு - நிறைவு.

62. Since every vice springs from the false pleasures of swerving from the Self-Awareness, the completion of virtue, is the perfect peace of pure Awareness, following the end of the ego, which is fed by such false pleasures.   (331)
------------------------------

63. நிலைத்தே உளம் உடையான் நீத உரை, அன்பர்
மலைத்தே கலங்கும் மனம், புன் புலத்து ஆறு
ஒழுகு ஒட்பம் ஓய்ந்து, உள் உறு கதிக்கு நல்ல
வழிகாட்டி ஆக மதி.   (502)

நீதம் - நீதி; உள் உறு கதிக்கு - உள்ளம் அடையும் பேறுக்கு.

63. The apt speech of one firmly established in the Heart, prevents the bewildered and confused devotee's mind from wastefully running in the desert of the senses, and points the way inward, to permanent liberation.   (502)
------------------------------

64. அறிவு பல என்பர் அயலை அறிவு அறிந்தார்,
பிறிவு படு பேத மயல் பேர்தல் அறியாரே,
வெறி விளையும் ஐ உணர்வை மீட்கும் அறிவாலே,
செறிவுபடு மெய் அறிவு தேற அயல் இன்றே.   (581)

பிறிவு படு - வேறுபடு;  பேர்தல் - நீங்குதல்; வெறி விளையும் - ஆசை ஆதி வெறி உணர்வை உண்டாக்கும்; ஐ உணர்வு - ஐம்புலன் உணர்வு; செறிவுபடு - நிறைந்த, பூரண; தேற - அடையவே.

64. Knowledge is multiple and various, say those who know objects, but not the freedom from, the dire delusion of differences. When the five senses, driven outward by desire, are pulled back, then, true, full Awareness comes, and there is no "other" to be known.   (581)
------------------------------

65. உளதே உணர்வு, அவ் உணர்வே மகிழ்வு,
களவே அயலால் களித்தல், தெளிவு ஆரும்
உண்மை ஆம் தன்னை ஒழி, கற்பனா விடயத்து
உண்மை மகிழ்வு உண்டோ உரை.   (584)

தெளிவு ஆரும் - தெளிவுடன் கூடிய; ஒழி - தவிர்ந்த.

65. The only Being is Awareness, and Bliss is nothing but Awareness. Pleasure from elsewhere is mere delusion. Apart from the Self of Being-Awareness, how can real joy come from objects merely fancied?   (584)
------------------------------

66. அறிவு இன்பம் கண்டிலா வாதர், புன் மாதர்
குறி இன்பம் ஆதியாக் கூறும், பிறிது இன்பம்
தன்னை மதித்துத் தடுமாறிச், சாம் பொழுதும்
அந் நினைவால் ஏங்கி அழிவார்.   (586)

வாதர் - வாதிப்பவர்கள்; சாம் பொழுதும் - சாகும் பொழுதும்.

66. Not knowing the bliss of Self-Awareness, people highly rate sex and other similar pleasures. Living thus, they yearn for these, even when they die.   (586)
------------------------------

67. கண்டு களிக்கக் கடவதா, உள்ளத்து
மண்டு பெரு வாழ்வை மறந்து போய், விண்ட
தினைத் துணையும் பற்றாச், சிறு விடயத் தேனை
நினைத்து உருகும் பேதையர் நெஞ்சு.   (587)

மண்டு - நிறைந்த; விண்ட தினைத் துணையும் - உடைந்த தினை அளவும்; பற்ற - சமம் ஆகாது.

67. Forgetting the pure bliss eternal, welling up in the heart for our enjoyment, foolish people yearn for honey driblets, squeezed from objects, worse than broken rice.   (587)
------------------------------

68. எண்ணுக்கு அடங்காப் பேர் இன்பச் செழும் கனியை,
உண்ணும் உயர் நாட்டம் நனி உற்றார்க்குக், கண் இழந்த
ஏமரா மாக்களே எய்தக் கடவது ஆம்,
காமரு சிற்றின்பம் கடை.   (589)

செழும் கனி - பழுத்த சிறந்தக் கனி; நனி - அதிகமாக; கண் இழந்த - அறிவு அற்ற; ஏமரா - காப்பாற்றப்படாத; காமரு - விருப்பமுள்ள.

68. Sense pleasures, sought and found by blind, unguarded fools, are fit only for contempt by those who long to taste the rich, ripe fruit of immeasurable sweet, supreme Bliss.   (589)
------------------------------

69. ஐம்புலத்தை ஆற்ற அடர்த்து ஒழுகும் அவ் இனத்தோடு,
என் பொருட்டுக் கூடி ஒருங்கு எய்கின்றார், புன் புலத்துக்கு
எண் பதத்தால் ஏங்கி இளகிக் கரைந்து ஒழுகும்,
பண் படா உள்ளத்தவர்.   (605)

அடர்த்து ஒழுகும் - அடக்கி அழித்துப் பழகும்.

69. Those who with minds far from mature, yearn for and wallow in sense pleasures, why would they seek, why would they join, the company of saints whose conquest of senses is complete and final?   (605)
------------------------------

70. நள்ளாமே போக நசை யாதும் தன் மனத்தால்,
விள்ளாமே ஆன்ம நிட்டை மேவலே, தெள்ளியோர்
உண்ணா விரத உபவாசத்து உண்மை எனக்,
கண்ணா நின்று ஆசரிப்பர் காண்.   (678)

நள்ளாமே - விரும்பாமலே; விள்ளாமே - விடாமல்; மேவலே - இருப்பதே; தெள்ளியோர் - நற்புத்தி உடையோர்; கண்ணா நின்று - கண்ணைப் போல் கருதி.

70. Absence of mental craving for sense enjoyment is true fasting. Abidance in the Self is true worship, hence, those with pure, clear wisdom, cherish as most precious, this fasting and this worship.   (678)
------------------------------

71. ஓட்டை அடைத்து உள் உணர்வு தேக்காது,
பூட்டை உடைத்துப் பொறி வழிப் போக்கல்,
கோட்டை இடித்து குள நீரைப் போக்கி,
நாட்டை அழிக்கும் நவைச் செயல் ஆமே.   (686)

71. Instead of plugging holes, and keeping Awareness still within, to break the lock and spill it through the senses, is despicable, like demolishing the bank and draining out the tank, to devastate the land.   (686)
------------------------------

72. வேட்கையால் மேல்மேல் விழுமம் விளைவு அறிந்து, அவ்
வேட்கை அற விட்ட விழுமியோர், மேற் கொளும் நேர்
ஆன்ம விசாரத்தால் அடைவர் அகத்து, அந்தம் இல் பேர்
ஆன்ம ரச அநுபவம்.   (764)

விழுமம் - துன்பம்; விழுமியோர் - பெரியோர்.

72. Seeing that desires, bring in their wake, increasing sorrow, noble ones, renouncing all desires, begin direct self-enquiry and attain the infinite bliss, of the Self-Awareness within.   (764)
------------------------------

73. மைய உளத்து மடுக்கும் உணர்வு உறுங்காறு,
ஐ உணர்வு சற்றும் அடங்காது, மையல் ஆம்
ஐ உணர்வு முற்றும் அவியுங்காறு, எய்தாது
மெய் உணர்வு ஆம் இன்ப விளைவு.   (784)

மைய - நடுவு; மடுக்கும் - அடையும்; காறு - வரை; ஐ உணர்வு - பஞ்ச இந்திரிய உணர்வு.

73. Until to taste the bliss at the Heart's core, the five senses will never subside. Till these distracting senses utterly die, you will not gain true Being's bliss.   (784)
------------------------------



































Saturday, June 21, 2014

The Garland of Guru's Sayings - Selections 6

Turning Inward - Section 6: Turning Inward (21 sayings)

Source: English translation and the highlights as in
http://www.albigen.com/uarelove/muruganar_turning_inward.htm#6

1. உள் உறவு கொண்டார்க்கு, உவட்டல் உறாது ஆர்வம் எழும்,
தெள்ளு பரம ஆனந்தத் தீங்  கனியாய், உள்ளம் உறத்,
தூண்டா மணி விளக்காய்த், தூங்காதே தூங்கு உண்மை,
ஆண்டான் அருளே பொருள்.   (17)

1.  To those who look within, the highest good gained by the Master's grace is wakeful sleep, the fourth state, the undying flame, the sweet, uncloying fruit, forever fresh.   (17)
------------------------------

2. நான் என்பதனை அக நாட்டத்தால், தான் அல்லது
ஆன அன்ன கோசம் முதல் ஐந்தன் உளும், தான் அணுக
ஒண்ணாது ஒழித்து அமைந்த, உள்ளத் தெளிவில் நின்றே
உண்மைக் கவித்துவம் உண்டாம்.   (140)

அணுக ஒண்ணாது - நெருங்காது.

2. True poetry, springs only from the calm heart's clarity, which follows the elimination of the ego, by inward search, and finding out that none of the five sheaths is I.   (140)
------------------------------

3. இவ்வாறு உள் ஏகாக்கிர உரம் சேர் சிந்தைக்கே,
செவ்வே விசாரம் தான் சித்திக்கும், ஒவ்வாத
மிச்சை மனம், ஞான விசார நெருப்புக்கு ஈந்த
பச்சை விறகின் பரிசு.   (763)

3. Only a one-pointed mind, turned inward, succeeds in Self-inquiry. Weak, faltering minds, like green banana trees, are not fit fuel to feed this fire.   (763)
------------------------------

4. ஆன்மாவே உண்மை விழி, ஆதலால் அது அறியும்
ஆன்மாவே உண்மை அபரோக்கம், ஆன்ம நோக்கு
அற்ற சடர் தாமே, அபரோக்கம் என்பர் அயல்
உற்ற விடயம் புலனா ஓர்ந்து.   (878)

அபரோக்கம் - கண் கூடான பிரத்யக்ஷ அனுபவம்; சடர் - ஜடர்.

4. Self-Awareness alone is the true Eye. One has direct immediate knowledge, only of Self-Awareness. But minds averted from Self-Awareness, look through the senses at a world other than the Self-Awareness, and mistakenly think it can be known directly.   (878)
------------------------------

5. உள்ளம் ஆம் செம் பொருளை ஓர்த்து உணராப் பேதையரே,
கள்ள மாயத்துள் கலங்குவார், வெள்ளமா
விஞ்சு பேர் இன்ப வியன் பரம் தேர்ந்து, ஒட்பம் கூர்
விஞ்சையார் நெஞ்சம் அஞ்சார்.   (551)

ஓர்த்து - ஆராய்ந்து; விஞ்சு - மிஞ்சும்; வியன் - ஆகாயம் போன்று; ஒட்பம் கூர் - அறிவொளி பெற்ற; விஞ்சையார் - ஞானியர்.

5. Only those foolish folk, who have not searched and found the Truth Supreme, the Heart, flounder in fear, in the treacherous illusion. Those who have known the supreme bliss, the boundless flood of heavenly brightness, fear no more.   (551)
------------------------------

6. நீரில் படகு நிகழ்வது அலால், நீர் படகில்
ஊரில் பெருத்த இடையூறே ஆம், வாரிதி சூழ்
பாரில் வதிவது அலால், பார் மனிதன் உள்ளத்துள்
சேரில் உயிர் வாழ்வு முற்றும் தீங்கு.   (822)

வதிவது - வசிப்பது.

6. The boat moves in the water, but water should never enter into it. Though one lives in the world, the world should not occupy one's mind.   (822)
------------------------------

7. வளியால் அழிவு எய்தும் வங்கத்தின் பாய் போல்
வெளியே பரந்து விடாமை, நளி கடல் வாய்த்
தாழப் படிந்து தரித்த நங்கூரம் போல்,
ஆழப் புகுவது அறிவு.   (191)

வளி - காற்று; வங்கம் - பாய் மரக் கப்பல்; நளி கடல் - பரந்த கடல்.

7. Not like a boat's sail, outspread wide and worn away by the wind and weather, but like the humble anchor, sunk in the vast ocean's depth, the mind should plunge and settle in the heart of wisdom.   (191).
------------------------------

8. ஞால மட மாந்தர் நயக்கும், அணிமா ஆதி சித்தி
ஏல ஒருங்கே இசைந்தாலும், மூல
முடிச்சு அவிழ்த்து, ஆன்ம முழு மணி எய்தாதார்,
படிச்ச படிப்பு அனைத்தும் பாழ்.   (1065)

8. Though one should win at one stroke all the powers people yearn for, all one's learning is just wasted, if one fails to undo the primal knot, and to reclaim the one sole, perfect jewel, the Self-Awareness.   (1065)
------------------------------

9. உண்மையிலே இல்லாப் பொய் ஒன்று, தான் உள்ளது போல்
வண்மை சேர் ஒட்ப மதி மக்களையும், திண்மையால்
முற்ற மயக்கி முறுவலிக்கும், தன் உள் தன்
வெற்றியைத் தானே வியந்து.   (594)

வண்மை சேர் ஒட்ப மதி - கூர்மை நிறைந்த மதி; திண்மையால் - வலிமையால்.

9. Non-existent illusion, this alone, seeming to be real and powerful, makes fools of even the cleverest folk, and smiles inwardly, with wonder at its own success.  (594)
------------------------------

10. வினாவிடு கேள்விக்கு விடை இறுக்கும் ஆற்றால்,
கனா நொடியாத் தோன்றிக் கழிய நனா நெடிதா
மன்னலாக் கூறும் மறுமாற்றம், மனமாயைத்
துன்னலால் போந்த வினைச் சூது.   (560)

வினாவிடு - கேட்கின்ற; மன்னலா - இருப்பதாக; மறுமாற்றம் - பதில்; துன்னலால் - வந்ததால்; போந்த - உண்டான.

10. "A dream in a moment comes and goes. This 'waking' life is enduring." Such argument is but the trick played by mind and illusion conspiring.   (560).
------------------------------

11. எங்கு எங்கும் தானா இருந்து ஒளிர் சிற்றம்பலத்தை,
அங்கு இங்கும் தேடி அலைந்திடுதல், பங்கம் உறும்
பால் மதியின் மேதகவால், பட்டப் பகலிடையே
வான் சுடரைத் தீத் துரீஇ அற்று.   (1016)

பால் மதி - பூரண சந்திரன்; மேதகவு - மேன்மை; தீ - தீப் பந்தம்; துரீ - தேடுதல்.

11. The inner-light, self-luminous, shines all the time as I, as I. To go from place to place in search of That, is like looking at noon, torch in hand, for the bright Sun which hides the full moon from our sight.   (1016)
------------------------------

12. பூதலத்தே ஓடோடிப் புண்ணியரைக் கண்டு இறைஞ்சி,
ஆதாரத்தோடு உண்மையினை ஆராய்வீர், மாதவத்தோர்
திட்டம் உறச் சிந்திக்கும் செம்பொருளைச் சோதித்தால்,
வெட்ட வெறும் ஞான வெளி.   (1007)

12. You who in eager search of Truth, roam over the world looking for saints, when you examine what they teach as definitive, it is only the empty sky of pure Awareness.   (1007)
------------------------------

13. காசினியைச் சுற்றிக் கடுக வலம் புரிந்து,
தேசிகரைத் தேடிப்போம் சீடர்கட்கு, ஆசிரியத்
தந்தைமார் காட்டித் தருவது தான் கண்டக்கால்,
விந்தை சேர் ஞான வெளி.   (1008)

காசினி - உலகம்; கடுக - விரைவில்.

13. Seekers hurrying round the world in search of teachers, find at last that their paternal gift is only the marvelous sky of 'mere' Awareness.   (1008)
------------------------------

14. தமக்கு மருத்துவர் தாம் என்பதாலே,
எமக்கு மருத்துவம் எண்ணி அமைக்க,
மருத்துவ, எம் பால் வருமுன், உனக்கு
மருத்துவம் கண்டு பின் வா.   (804)

14. The true physician is one's Self-Awareness. Hence, people tell the would-be Teacher: "Before you start prescribing medicines for us, first cure yourself (of blindness), and then come to us".   (804)
------------------------------

15. உண்மை எனப்படுவது ஒன்றே உணருங்கால்,
திண்மை சேர் அந்த முழுச் செம்பொருளே, நுண் மதியால்
மெல்ல உளம் புக்கு உணர்ந்த விப்பிரரால், பல் படியாச்
சொல்லப் படலாத் துணி.   (1234)

விப்பிரர் - மெய்ஞ்ஞானி.

15. Reality is one and only one. This permanent and perfect Being, has been described variously by sages who with keen minds have searched the Heart, and there experienced It.   (1234)
------------------------------

16. ஒன்றே முதல் ஆக உள்ளன போல், மும் முதலை
நன்று என யாரும் முன் நயப்பது ஏன் என்றாலோ,
சுட்டறிவு தன்னால் சுழலும் உயிர்க்கு, அன்ன உடன்
பட்டு அலது அவ்வொன்று படாது.   (115)

யாரும் - எந்த ஆசானும், மதமும்; முன் - முதலில்; நயப்பது - ஏற்றுக் கொள்வது; அன்ன - அவ்வாறு; படாது - உணரப்படாது.

16. Though thus Reality is one, all schools concede at first, three primal entities, God, individual and world, because the discursive outward looking mind cannot straightaway, face the unity of Being.   (115)
------------------------------

17. கருத்து அணுவும் இல்லாக் கருத்தனது முன்னே,
உருத்த தொழிற்கு உள் ஆம் உயிர், தாம் பொருத்தும்
கதி பல உள் புக்குத், தம் கன்மானுசார
விதி வழி மீண்டு எய்துவன வீடு.   (108)

உருத்த - நிறைந்த; பொருத்தும் - ஈடுபடும்; கதி - வழி; விதி - விதிக்கப்பட்ட.

17. In the mere presence of the Lord, Himself free from all traces of thought, individuals set out in numerous paths of action, work away, and wearied, turn inward and return to freedom.   (108)
------------------------------

18. உள்ளதே உள்ளம் என ஓங்கும் திருவருளேல்,
உள் உருகி உள்ளா உயிர்கட்கே, உள்ளதனை
எள்ளு குறை ஏயும் அலாது, இன் அருள் செய்யாக் குறை அவ்
உள்ளதனுக்கு எங்ஙன் உறும்.   (966)

எள்ளல் - இழிவாக பேசுதல், தள்ளல், நிந்தை.

18. That which Is, forever shines in Grace as I, the Self-Awareness, the Heart. Can that be blamed for lacking Grace? The fault is theirs who do not turn within and seek the Self-Awareness, in love.   (966)
------------------------------

19. அறிவு உள் முகமாய் அகந்தை அடங்கிச்,
செறிவுள் மிக ஒளிர் சத் சித்தே, குறி குணம் தீர்
தான் மன அதீதமாய்ச் சார்ந்தே, குருவாய்த் தோன்று
ஆன்மன் ஆம் ஈசன் அருள்.   (967)

செறிவுள் - ஒடுக்கத்தினுள்; குறி - உபாதி;  தீர் - ஒழிந்து.

19. Mind turned inward and ego dead, there shines The Self, the Being Awareness, and though transcending form and feature, It appears as Teacher. Thus does God, the Self-Awareness, bestow as Teacher, His Grace.   (967)
------------------------------

20. எல்லாரையும் கடைக்கணிக்கும் பொதுக் கடவுள்,
பொல்லாரை ஏனோ புறக்கணித்தல், எல்லாமாய்ப்
பொங்கும் கண் ஒன்றைப் புறக்கணிப்பது இல்லை, அவர்
மங்கும் கண் மாலை மயக்கு.   (970)

எல்லாமாய்ப் பொங்கும் கண் - காணப்படுவன யாவையுமாய் இருந்தொளிரும் கண்.

20. Why should God's glance of Grace, which falls on all alike, seem to avoid some "sinners"? The universal Eye avoids no creature. We are blind, for we look outward, not within.   (970)
------------------------------

21. உழுவல் அன்புக்கு இடனா உற்ற, பேர் இன்பாய்
விழுமிய மெய்ஞ்ஞான விசும்பாய், எழுவாய்,
அழிவு இலா ஆன்ம நிலையாம், பூன்றம் நின்று
நழுவலே காலன் என நாடு.   (247)

உழுவல் அன்பு - ஏழ் பிறப்பும் தொடர்ந்து வரும் நாயகன் நாயகி உறவு; இடன் - இடம்; விழுமிய - சிறந்த; எழுவாய் - மூலம் அல்லது எழுதல்.

21. What else is death, but straying from, the perfect state of Being the immortal Self, home of eternal love and supreme bliss, the heaven of true Awareness?   (247)
------------------------------






































Friday, June 20, 2014

The Garland of Guru's Sayings - Selections 5

Turning Inward - Section 5: The Body (18 sayings)

Source: English translation and the highlights as in
http://www.albigen.com/uarelove/muruganar_turning_inward.htm#5

1. மையல் ஆக்கத்தாலே, மனம் மருண்டு நோக்கும்
அயல் நோக்கின் அன்றி, மெய் ஆன்ம இயல் நோக்கில்
தேகமே இன்றேல், சிதாகாய ஆன்மாவைத்
தேகி எனச் சாற்றல் செயிர்.   (97)

ஆக்கம் - வலிமை; சாற்றல் - சொல்லுதல்; செயிர் - குற்றம்.

1. Only the mind deluded by illusion's might, and looking outward, sees the body. The true Self knows no body. To call the Self of pure Awareness, the body's owner or indweller is an error.   (97)
------------------------------

2. முதலையைக்  கட்டையா முன்னிப், புனற்கு
மதலையாக் கொண்டு உகைத்தான் மானும், குதலை
உடல் மல்கும் ஆர்த்தியராய்த், தம் உயிரைக் காண
உடன் முயல்வதா உரைப்பார் மாண்பு.   (125)

முன்னி - எண்ணி; புனற்கு - ஆற்றுக்கு; மதலை - தெப்பம்;  உகைத்தான் - செலுத்தினான்; மானும் - போலும்; குதலை - அற்பமான; மல்கும் - நிறைந்த; ஆர்த்தி - ஆசை உள்ளவர்கள்; உயிர் - ஆன்மா.

2. Like one who takes a crocodile for a boat, and with its help tries to cross a river, are those who, while they pamper the trivial flesh, claim that they are earnest seekers of the living Self-Awareness.
------------------------------

3. இழிவு உடல் யான் என்னல் இகந்திடுக, என்றும்
ஒழிவு இல் இன்பாம் தன்னை ஓர்க, அழியும்
உடல் ஓம்பலோடு தனை ஓர உனல், ஆறு
கடக்கக் கராப் புணை கொண்டு அற்று.   (B1)

இகந்திடுக - விட்டொழிக; ஓர - உணர; உனல் - எண்ணல்; கரா - முதலை; புணை - தெப்பம்.

3. Give up the thought that this frail body is the Self. Pursue the Self-Awareness, which is eternal bliss. To seek It, while cherishing the perishable body, is like trying to cross a river using a crocodile for a raft. - Sri Ramana.
------------------------------

4. உண்மையிலே தான் அலது இன்றேனும், உடலே தானா
உள் மயலால் எண்ணும் முயக்கமே, திண்மை ஆம்
அத்துவித ஆனந்த அமுதத்துவம் கழன்று,
செத்துப் பிறக்கும் திறம்.   (615)

தான் அலது இன்றேனும் - தன்னைத் தவிர வேறு ஒன்றும் இல்லை ஆயினும்; முயக்கம்  - மயக்கம்.

4. Except the Self-Awareness, nothings exists. But then the deep delusion that the body is one's self, makes one let go the solid, non-dual bliss of immortality, and fall into birth and death.   (615)
------------------------------

5. உருவ அகங்காரம் ஒழிந்த மனத்தோர்க்கே,
அருவ வழிபாடு இயல்வது ஆகும், மருவும்
உருவ அகங்கார மனத்தோர் வழிபாடு எல்லாம்,
உருவ வழிபாடே உணர் .   (657)

5. Worship of the formless is for him alone who has left behind the notion "I am this form, this body". One who is still identified mentally with his body-form, worships only form, though he may think he is worshipping the formless.   (657).
------------------------------

6. தூய உணவை எலாம், தோய்ந்த சிறு பொழுதில்
தீய மலம் ஆகச் செயும், தேகம் ஆய பாழ்
ஊத்தை மலம் தாமா உவப்பார், மலம் தின்னும்
பாழ்த்த விலங்குதனில் பாழ்.   (682)

6. Those who love, deeming they are, this putrid body of flesh, that in a brief while turns clean food to filth, are baser than the swine that feasts on filth as food.   (682)
------------------------------

7. தின்று அமலம் ஆக்கும் மல தேகோகர் பவ்வீ  தின்
பன்றியினும் கேடாப் பகர்.   (B10)

பவ்வீ  - மலம்.

7. Those who deem themselves the body, that soon converts clean food to filth, are worse than swine that feed on filth.  - Sri Ramana (B10)
------------------------------

8. பூத உடல் அகந்தை பொன்றலால், அவ் உடல் மேல்
பூதங்களாலே பொருந்துப ஆம் ஏதங்கள்,
உள்ள தன் மேல் கொள்ளாது உதாசீனமாய், அவற்றைத்
தள்ளுதலே பூத சயம்.   (688)

பொன்றல் - அழிதல்; ஏதங்கள் - குற்றங்கள்; சயம் - வெற்றி கொள்வது.

8. What is conquest of the elements? Destroying the ego, the attachment to the body, made up of the five elements, and scorning with contempt the flaws of the flesh, which have nothing to do with the true Self-Awareness, but are only based on the five elements.   (688)
------------------------------

9. நானே நான் என்ற மெய்ஞ்ஞானம் இன்றி, இன்னான் என்று
ஊன் உடலே தானா ஒழுகுவான், ஊனம் உற
நாசமாய் வீணே நலிவான், கானாப் போலும்
பாச மோகத்துள் படிந்து.   (775)

9. He who, being ignorant of the truth that he is "I, I", the Self-Awareness, regards this body as himself, can only perish with the perishing flesh, caught in the web, the dream-like web, woven by his own illusions.   (775)
------------------------------

10. மேவல் அரும் பேர் இன்ப வீடு, விழுத் துறவு,
சாவு அகலும் சாவு, சதுரப்பாடு யாவும்,
மருள் உடல் நான் என்ற மயக்கம் அறல், என்னும்
ஒரு பொருளவே என்று உணர்.   (847)

மேவல் அரும் - அடைவதற்கு அரிய; விழு - சிறந்த; சதுரப்பாடு - சாமர்த்தியம்.

10. What is liberation, the bliss supreme attained by few? And what is noble renunciation? What is Death that brings immortality? What is the highest achievement? All are but this one thing: the ending of the foolish, false illusion that "I am the body".   (847)
------------------------------

11. ஆகத்து அகம் புத்தி அற்றால், அலமரல் சேர்
மோகக் கலக்கம் முடிந்து ஒழியும், ஆகா
நிருவிகற்பம் ஆக நிகழ் சித் பரமே,
துருவு அகத்துத் தோன்றும் அகம்.   (866)

ஆகம் - உடம்பு;   அலமரல் - துன்பம்; துருவு அகத்து - விசாரிக்கின்ற உள்ளத்தில்.

11. When the sense that "I am the body" dies, all  troublesome illusions and confusions vanish once and for all. Within the explored heart, the non-dual Self of pure Awareness appears as "I, I".   (866)
------------------------------

12. மைம் மயல் சேரா ஞான மார்தாண்டனாம், தமது
மெய்ம்மையே இன்பா விளங்கலால், பொய்ம்மை ஆம்
சீவ போதத்தால் தெருமரல் ஆம் துன்பு, அலது ஒன்று,
யாவருமே எய்திற்று இலர்.   (953)

தெருமரல் - சுழலல், நம்பிக்கை அற்று இருத்தல்.

12. Our real Being, the Sun that never can see the darkness of illusion, knows no trace of pain or suffering. Misery is what one brings upon one's self, by fondly thinking that one is the body, not the Self-Awareness.   (953)
------------------------------

13. சுமங்களம் ஆம் தன் சொருபம் சோதிக்கில், வாழ்வு ஊடு
அமங்களம் அங்கு இல்லை அறவே, தம் அங்கம் என்றும்
அல்லாததன் ஊடு, அகம் புத்தியால் அழுங்கல்,
பொல்லாத மோகப் புணர்ப்பு.   (954)

13. Blissful and auspicious is the Self-Awareness, our real Being. One who knows this, sees in life no trace of suffering or pain. Misery is what one brings upon one's self, by foolishly thinking that the body, not the Self-Awareness is one's true self.   (954)
------------------------------

14. ஒருவனாத் தம்மை உணராதார், வீணில்
வெருவல் ஆய் நாளும் விளிவார், கரு ஆம்
உடல் அகந்தை ஆன உணர்வு ஒழியத், தன் மெய்த்
திட உணர்வால் அத்துவிதம் சேர்.   (955)

வெருவல் - அஞ்சி; விளிவார் - அழிவார்.

14. Not seeing one's self as the one Self-Awareness, one always suffers fear and anguish. Destroy the "I am the body" thought, and in Self-Awareness firmly fixed, abide in real non-dual Being.  (955)
------------------------------

15. நான் என்னும் ஞானம் அஞ்ஞானமாத் துஞ்ச, வெறும்
தான் என்னும் மோனமே தக்கது காண், ஏன் என்னக்
கேட்கிலோ, உண்மை கிலேசத்துக்கு எதுவா
வேட்க ஒன்று இல்லா வெளி.   (1012)

துஞ்ச - அழிய; வேட்க - விரும்ப.

15.When the false notion "I am the body" dies, what abides is what's worth having, the vast bright, silent void, the Self-Awareness. Why is it so? Because in truth, the only state free from all pain and all desire is pure Self-Being.   (1012)
------------------------------

16. வான் உடலம் ஆக வழங்கு உற்ற, மெய்ஞ்ஞான
பானு ஆம் தம் மெய்ப் பரிசு உணர்ந்தார்க்கு, ஊன் உடல
மோக அந்தகாரம் முயங்கியதே, இன்மையால்
தேக அந்தர்க்கே திமிரம் தேர்.   (1085)

அந்தர் - குருடர்; திமிரம் - இருட்டு.

16. The darkness of illusion never touches the seer who knows his true identity as pure Awareness, vast as the sky, bright as the sun. Only the blind, who think they are bodies, suffer from dark ignorance.  (1085)
------------------------------

17. உன்னை நீ ஏனோ உபாதி அளவு ஆக, மனத்து
உன்னி வீணாக உழல்கின்றாய், துன்னும்
உபாதி இலாது ஒன்றும் உறக்கிலும், நின் உண்மை
அபாதிதமா நிற்றல் அறி.   (1088)

17. Why do you suffer in vain, believing that you are hemmed in by the body? Even in sleep, when you are free from thoughts of separateness, your being abides intact and whole.   (1088)
------------------------------

18. ஊனம் ஆம் ஊத்தை உடல் அகந்தை ஓய்ந்து, உளம் சேர்
மோனம் ஆம் உண்மை முடிவு உணரார், ஞான
சுய ஆராய்வு இலார் மேற் கொள் சொல் மோனம், சித்த
வியாபாரம் அன்றோ விளம்பு.   (1200)

18. True silence is the state of being Self-Awareness in the heart, when the false, foolish sense that one is but the body, is no more. Mere verbal silence, undertaken without inquiring "Who am I?" is no better than a mental trick.   (1200)
------------------------------













































Tuesday, June 17, 2014

The Garland of Guru's Sayings - Selections 4

Turning Inward - Section 4: Ignoring and turning one's attention away from thoughts and towards Awareness-Watching-Awareness (14 sayings)

Source: English translation and the highlights as in
http://www.albigen.com/uarelove/muruganar_turning_inward.htm#4

1. இயற்கையை மாய்க்கல் இயல்வது அன்று யார்க்கும்,
இயற்கை பொருள் அன்று என்று இகழாய், இயற்கைக்கு
அடிப்படை ஆம் தன்னை அறிந்து உணர்ந்து நிற்கில்,
படிப் படியா வேகம் கெடும்.   (921)

இகழாய் - விட்டுவிடுக.

1. None can confront and overcome the mind. Ignore it, then, as something false and unreal. Know the Self-Awareness as the real ground and stand firm rooted in it. Then the mind's movements will gradually subside.   (912)
------------------------------

2. அலையும் மனம் நீரில், அகந்தையாம் சாயை
அலைவு, அதனை மாற்றும் முறை ஆயின், நிலை நழுவத்
தான் அதனை நோக்காது, தன்னையே தான் குறித்து
மோனம் உற நிற்கை முறை.   (1192)

2. The ego image moves reflected in the mind's waves. How to stop this movement, how to regain the state of stillness? Don't observe these movements, seek the Self instead. It is wisdom to gain and abide in silence.   (1192)
------------------------------

3. நான் அற்று ஒழுகும் மெய்ஞ்ஞான சமாதியே,
மோனத் தவம் என்பர் மூது அறிஞர், ஊன
நினைப்பு அற்ற மோன நிகழ்ச்சி உற, நெஞ்சில்
தனைப் பற்றல் சாதனம் ஆம்.   (1193)

3. The seers declare that pure silence is firm abidance in egoless, true Awareness. For such thought-free silence, the means is clinging to the Self-Awareness within the Heart.   (1193)
------------------------------

4. சுத்த அறிவு உண்மைத் துலக்கம் ஒன்றே உளது ஆம்,
மெய்த்திறமே போல் அதன் கண் மேவல் உறும், மற்றை
அறிவு அனைத்தும், போலி அகக் கற்பிதக் கார்
அறிவு, அவற்றை நம்பல் இழுக்கு ஆம்.   (421)

மேவல் உறும் - உண்டாகி இருக்கும்; கார் அறிவு - அஞ்ஞானம்.

4. The one true light there is, is pure Awareness. Other kinds of knowledge clinging to it, and claiming to be real, are ego-born conceptual clouds. To trust them is sheer foolishness.   (421)
------------------------------

5. அறியல் ஆகாத பல அற்புத நுட்பம் தான்
அறிவன் ஆமேனும், அவற்றை அறியும்
அறிவை அறியும் அளவும், அவன் உண்மை
அறிவானோ, ஆகான் அறி.   (424)

அறியல் ஆகாத - அறிதற்கு அரிதான; அறியும் அளவும் - அறியும் வரை.

5. What if one knows, the subtle secrets of manifold inscrutable mysteries? Until one knows the Awareness which reveals all other knowledge, does one know the Truth?   (424)
------------------------------

6. மத்த மன வாதனை தாம், மாண்ட அபரோக்க ஆன்ம
சுத்த ஞானத்தால் தொலைவது அலால், மெய்த் தாபம்
கானலின் நீராலே கழியின், உயிர்த் தாபமும் பொய்
ஆன பரோக்கத்தால் அறும்.   (529)

தொலைவது அலால் - நீங்குமே அல்லால்; கழியின் - நீங்கினால்; உயிர்த்தாபம் - ஜீவர்களின் தவிப்பு (மோக்ஷ வேட்கை).

6. The individual's thirst will vanish, only when the habits-predispositions-tendencies, of the frenzied mind die, and direct experience comes of pure Awareness. If mirage water could quench thirst, then only would indirect knowledge satisfy the individual's longing.   (529)
------------------------------

7. நீக்கம் அற நெஞ்சு அகத்தே நின்று ஒளிர்ச், சத் சித்து உருவைச்
சூக்கமா நோக்கித் துலங்காதோர், தாக்கும் அதி
மோக அகங்கார முனைப்பு ஆன, சுட்டு அறிவால்
மாழ்கல் உற்றார், மாயா மயத்து.   (644)

துலங்காதோர் - விளங்கிக் கொள்ளாதவர்கள்; மாழ்கல் உற்றார் - மயங்கல் உற்றார்; மாயா மயத்து - நிறைந்த மாயையில்.

7. Those who do not keenly seek and recognize the Being Awareness shining incessant in the heart, sink deep into delusive illusion, due to the denotative knowledge piled up by the mounting ego.   (644)
------------------------------

8. யாவன் எதனை இடைவிடாது எண்ணுவான்,
ஆவன் அதுவாக அதன் ஆற்றலால், ஆர்வமொடு
சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகின், மற்று அழித்துச்
சார்தரா சார் தரும் நோய்.   (750)

சார்பு கெட- உலகப் பற்று நீங்க; ஒழுகின் - சாதனை செய்தால்; மற்று - மீண்டும்; சார்தரா - சாரமாட்டா;  சார் தரும் - பந்தத்தை  தரும்.

8. What we incessantly think of, that we become. Hence, if we keenly seek the Self-Awareness, and think of nothing else, the malady of birth will cease, and all thoughts will end.   (750)
------------------------------

9. எண்ணக் கடவதா யாதும் இலை, எண்ணம் அற்ற
வண்ணமாத் தன் மயத்தில் வாழ்வோர்க்கு, நண்ணக்
கடவது மோன அனுபவக் காட்சியே, தன் பால்
படர்வது ஒன்றும் இல்லை பரத்து.   (1161)

படர்வது - அடைவது.

9. What need is there for any thinking for those who in the thought-free bliss of Self-Awareness, live their lives? All they experience is bright stillness. In this supreme state, there is no "other" and nothing to gain.   (1161)
------------------------------

10. துட்ட அகங்கார மனத் தோற்றமாம் கற்பனை தீர்
வெட்ட வெளியாக விளங்கலே, மட்டு அறும் மெய்ஞ்
ஞான அனுபூதியா நண்ணும், ஏக அத்துவித
மோன அநுபூதி முறை.   (1184)

 மட்டு - அளவு, எல்லை.

10. Shining as the bright void, devoid of concepts raised by the villainous ego, this is the true experience of infinite Being-Awareness, the one non-dual bliss of pure silence.   (1884)
------------------------------

11. தள் அரிய சங்கற்ப ஜாலங்களை எல்லாம்
தள்ளி, அகங்காரம் உளம் சாருங்கால் உள் ஒளிரும்,
பூன்ற சொரூபாகார போதமாம் மோனமே,
ஆன்ற பரா வாக்கு என்று அறி.   (1197)

11. When the ego, shaking off all tricky concepts, finally merges in the silence of the Heart, the fullness of blissful, bright, Self-Awareness, this, this is what the sages call transcendent speech.   (1197)
------------------------------

12. சிந்தை இறந்து உள் உணர்வால், சிந்தை மூலம் செறிந்த
சிந்தையராம் நிச்சிந்த தீரர் அலால், சிந்தை சேர்
புந்தியார் தேறார், மெய்ப் போத சொரூபமாம்
சிந்தை இலாத சிவம்.   (1238)

12. The Self, who is pure Awareness, transcending thought, is only known to heroic seers, who with minds extinct, abide thought-free within the Heart, and not to those whose minds are still engaged in thought.   (1238)
------------------------------

13. மங்குல் படலம் சேர் வானத்தில், கண் காணச்
செங் கதிரோன் தோன்றாத் திறமே போல், கங்குல் செய்
சிந்தைப் படலம் செறிந்த மன ஆகாயத்தும்,
சொந்த சொரூபம் காண்பு அரிது.   (917)

மங்குல் படலம் - மேகக் கூட்டம்; கங்குல் செய் - அஞ்ஞான இருள் சூழ்ந்த; சொந்த - ஆன்ம.

13. As in the sky covered with thick clouds, no eye can see the glorious sun, one fails to see one's Self-Awareness, when the mind firmament is darkened by a dense cloud of thought.   (197)
------------------------------

14. கருத்தைக் கடிந்தோன், கன ஞான யானை
எருத்தத்து அரசா இவர்வான், கருத்து ஆம்
கலக்கமே, பொல்லாக் கடும் பிறவித் துன்ப
மலக்கம் ஆம், மன்ற மதி.   (918)

எருத்தம் - பிடரி; இவர்தல் - உட்காருதல்; மலக்கம் - துன்பம், மனக் கலக்கம்; மன்ற - தெளிவாக, நிச்சயமாக.

14. He who has vanquished thought, only he sits like an emperor on the neck of the majestic elephant, knowledge. Know for certain that the mind's movements alone give rise to birth and every cruel pain and sorrow.   (918)
------------------------------

































Monday, June 16, 2014

The Garland of Guru's Sayings - Selections 3

Turning Inward - Section 3: Practice, Earnestness, Effort and Zeal (10 sayings)

Source: English translation and the highlights as in
http://www.albigen.com/uarelove/muruganar_turning_inward.htm#3

1. வீண் நாள் படாது விசாரம் கடைபிடிப்பின்,
வாழ் நாள் உயிர்க்கு மிக மாண்பு உடைத்தாம், மாணா
உடல் உரு நான் ஓய, உயர்ந்த பரபோகக்
கடல் எழும் தன் உள்ளே கதிர்த்து.   (755)

மாணா - சிறப்பற்ற; கதிர்த்து - மிகுந்து.

1. If without wasting time, one starts and keeps up steady self-inquiry, one's life becomes at once ennobled, one is no more this wretched body, and there wells up within one's heart, a sea of supreme bliss.   (755)
------------------------------

2. உலகியலின் கண்ணும், உழைப்பினது வெற்றி
குலவும் சிரத்தை இன்றிக் கூடா, அலகு இல்
பரத்தை ஒன்றும் மட்டும், பயிற்சியில் ஓர் காலும்
சிரத்தை குன்றல் ஆகாது தேர்.   (694)

2. Even in this worldly life, one's labor bear no fruit without abundant faith. Hence, till one merges in the boundless supreme bliss, one's spiritual practice should never slacken.   (694)
------------------------------

3. அழுத்தம் உறக் கட்டா அடிப்படை மேல், பாரம்
பழித்தல் உறக் கீழ் வீழ்ந்து பாழ் ஆம், உழைத்தல் உறு
சாதகர் தாம் முன்பு சரியையை, எவ் ஆற்றானும்
மேதகவே காத்தல் விதி.   (826)

சரியை - பக்தி வைராக்கியம்; மேதகவே - நன்றாக.

3. A super-structure raised, without a strong foundation, soon collapses in disgrace. Hence, earnest seekers must first ensure by every means, their own stern self-discipline through devotion and detachment.   (826)
------------------------------
(Repeated from Section 2)
4. நல்ல சிவ சிந்தை நழுவாத மோன அருள்
செல்வமே உண்மைத் திரு என்பர், புல்ல ஓணா
ஒட்பம் கூர் அந்த உயர் நிதியம், சிந்தை அறப்
பெட்பு உற்றவர்க்கே ஆம் பேறு.   (1066)

பெட்பு - பெருமை; ஒட்பம் - நன்மை, மேன்மை.

4. True wealth is but the gracious silence of steady, unswerving Self-Awareness. This bright, rare treasure can be gained only by those who earnestly strive for the extinction of all thoughts.   (1066)
------------------------------

5. முன்னே தான் செய்த முயற்சியே பக்குவத்தால்,
பின்னே தான் ஊழ் உருவாப் பேர்தலால், முன் அதனை
ஆற்றிய தன்னாலே அரிது முயன்று, அவ் ஊழை
மாற்றலும் ஆம் என்றே மதி.   (692)

பேர்தலால் - மாறுவதால்.

5. Since it was one's own past effort, that has now ripened into fate, one can with greater present effort, change one's fate.   (692)
------------------------------

6. பின்னை எவை சாரினும் பேரினும் பேதுபட்டுத்,
தன்னை இமையாது சதா உணர்க, என்னை
அறிவு ஆய தன்னை அயர்த்த பிரமாதம்,
சிறிதேனும் பீழை பெரிது.   (612)

சாரினும் - வந்து சேர்ந்தாலும்; பேரினும் - பெயர்ந்து (நழுவிப்) போனாலும்; பேதுபட்டு - பேதைமைப் பட்டு; இமையாது - விடாது; என்னை - ஆச்சரியக்குறி; அயர்த்த - நழுவிய; பீழை - கேடு.

6. Undeluded by whatever may come and go, unwinking, watch the Self-Awareness, because the little fault of forgetting for one moment, one's true Being as Pure Awareness, brings tremendous loss.   (612)
------------------------------

7. அந்த மணியின் அருமை அறியாமையினே,
மந்தராய்ச் சோம்பி மடிகின்றார், தம் தம்
உரிமை ஆம் அத்தை உளவு அறிந்து பெற்றார்
பெரியோர், பேர் இன்பம் உற்றார் பேண்.   (1063)

7. Not knowing the value of this treasure, people perish through mere laziness. The great ones who have found the clue and traced and gained it, they enjoy eternal bliss.   (1063)
------------------------------

8. அத்துவிதச் செம்பொருளாம் ஆன்ம சொரூபத்தை, முழுச்
சித்தமொடு நீக்கமறச் சிந்திப்பே, சுத்த பர
மோனமாம் அன்றி, வெறும் மூட மனச் சோம்பல் உணர்வு
ஊன மா மோகமே ஓர்.   (1186)

8. Uninterrupted and whole minded concentration on Self-Awareness, our true, non-dual Being, this is pure, supreme silence, the goal; Not the lazy mind's inertia, which is but a state of dark illusion.   (1186)
------------------------------

9. தன் நிலை விட்டு எந் நினைவும் சாரற்க, சார்வனேல்
பின் இரங்கி மீட்டேயும் பேது உறற்க, என்னை பின்
எற்று என்று இரங்குவ முன் செய்யற்க, செய்வானேல்
மற்று அன்ன செய்யாமை நன்று.   (780)

பின் இரங்கி - மேலும்; மீட்டேயும் - மீண்டும்; எற்று என்று - எதற்கு செய்தோம் என்று.

9. Swerve not from your true state, thinking some thought, but if you do, do not commit the same foolishness again. Do nothing you may regret later, even if you did it once, never repeat it.   (780)
------------------------------

10. இழுக்கல் மனித்த இயல்பே எனினும்,
ஒழுக்கம் உளம் கொண்ட உரவோர், அவ் இழுக்கை
மத மானத்தாலே மறையாது, உடன்பட்டு
இதமாய்த் திருத்தல் இயைபு.   (790)

இழுக்கல் - தவறுதல்; மனித்த - மனித.

10. To err is human. When those strong in virtue err, they do not hide it in their pride. Instead, they own up to their lapse, and quickly reform themselves.   (790)
------------------------------



























Sunday, June 15, 2014

The Garland of Guru's Sayings - Selections 2

Turning Inward - Section 2: The Awareness-Watching-Awareness approach to Self-Inquiry & Self-Abidance (15 sayings)

Source: English translation and the highlights as in
http://www.albigen.com/uarelove/muruganar_turning_inward.htm#2

Michael Langford identifies Self-Inquiry as Awareness-Watching-Awareness based on these particular sayings: http://www.albigen.com/uarelove/

I would like to call these fifteen verses as "The Ramana Zen"! What a powerful pointing of Truth in these verses?! As noted earlier, the red highlights are as per Michael's, and they have a meditative flavor.

1. நோக்கலே சுட்டி எதனையும் நீ நோக்காது,
நோக்காலே அந் நோக்கையே நோக்குவையேல், நோக்கம் ஆம்
தன் மாத்திரமாத் தழைப்பதனால், எல்லாம் பின்
உன்மாதம் ஆம் சுட்டு உணர்வு.   (638)

1. If, instead of looking outward at objects, you observe that looking, all things now shine as I, the seer. Perception of objects is mere illusion.
------------------------------

2. அதனை நோக்காதே, இதனை நோக்காதே,
எதனையும் நீ நோக்காது இருப்பின், மதன் சேர்
இருப்பு நோக்கலே, எலை இல் சிதாகாசப்
பரப்பு நோக்கு ஆம் பொருள் ஆவாய்.   (647)

2. If you refrain from looking at this, that, or any other object, then by that overpowering look into Absolute Being, you become yourself the boundless space of pure Awareness, which alone is real Being.   (647)
------------------------------

3. அறிவை அறிவால் அறிவதே, உண்மை
நிறைவு அறிந்த ஞான நிவப்பு ஆம், அறிவால்
அறிவு அறியுங்காறு, அவ் அறிவுக்கு அமைதி
இறை அளவும் இல்லை அறி.   (418)

நிவப்பு - உயர்வு; இறை அளவு - கொஞ்சம் கூட; அறியுங்காறு - அறியும் வரை.

3. The only true and full Awareness is Awareness of Awareness. Until Awareness is Awareness of itself, it knows no peace at all.   (418)
------------------------------

4. அறிவே நீ ஆக அமைந்து உளதால் அன்றோ,
அறியா நின்றாய் இவ் அகிலம், அறிவு ஆம்
குறி நிற்கின், ஞானகுரு அதுவே ஆக,
அறிவிக்கும் உண்மை அறி.   (432)

அறியா நின்றாய் - அறிகின்றாய்.

4. Is it not because you are yourself Awareness that you now perceive this universe? If you observe Awareness steadily, this Awareness as teacher, will reveal the Truth.   (432)
------------------------------

5. ஞானமயம் ஆகத் தன் நாட்டத்தை மாற்றி, மெய்
ஞானமயம் ஆன அந் நாட்டத்தால் தான் நாடின்,
வானம் முதல் ஐம் பூத வையகமும் மெய் ஆகும்,
ஞானமயச் செம் பொருளா நாடு.   (52)

5. If mind turned towards Awareness and concentrating on Awareness, seeks the Self, the world made up of ether and other elements is real, as all things are Awareness, the one sole substance of true Being.   (52)
------------------------------

6. அயல் ஆம் அவற்றை அறியப் போகா, மெய்
இயல்பு ஆம் அறிவே இதயம், செயல் போம்
அறிவுக்கு தன் மெய் அவிர்தலால், அத் தன்
குறி நிற்கும் அதே குலா.   (435)

செயல் போம் - கிரியை நீங்கிய; தன் குறி - தன்னாட்டம்.

6. True natural Awareness, which does not go after alien objects, is the Heart. Since actionless Awareness shines as real Being, its joy consists in concentration on itself.   (435)
------------------------------

7. அறிவாத் தனை நன்கு அனுசந்திக்கிற்போன்,
செறிவான் அகம் ஆம் சிவத்து.   (742)

செறிவான் - நிலை பெறுவான்.

7. In the Self, he stands firm fixed who dwells and truly meditates on himself as pure Awareness.   (742)
------------------------------

8. மதியை வெளிச் செல்லாது மாற்றித், தன் மூல
இதயம் எனும் ஆன்மா இடத்தே சததம் உற,
யான் எனும் பாழ் எண்ணம் எழ ஒட்டாது ஊன்றலே,
ஆன்ம விசாரத்து அடைவு.   (389)

8. The method of Self-Enquiry is: to turn the outward going mind back to its source, the Heard, the Self-Awareness, and fix it forever there, preventing the rising of the empty "I".   (389)
------------------------------

9. நல்ல சிவ சிந்தை நழுவாத மோன அருள்
செல்வமே உண்மைத் திரு என்பர், புல்ல ஓணா
ஒட்பம் கூர் அந்த உயர் நிதியம், சிந்தை அறப்
பெட்பு உற்றவர்க்கே ஆம் பேறு.   (1066)

பெட்பு - பெருமை; ஒட்பம் - நன்மை, மேன்மை.

9. True wealth is but the gracious silence of steady, unswerving Self-Awareness. This bright, rare treasure can be gained only by those who earnestly strive for the extinction of all thoughts.   (1066)
------------------------------

10. அறிவிலே தன் பொய் அகந்தையை மாய்த்துச்,
செறிவதே உண்மைத் தெளிவு.   (862)

செறிவதே - நிலை பெறுவதே.

10. Losing the false ego in Awareness, and firm abidance as Awareness is true clarity.
------------------------------

11. ஊனம் அற உள்ளத்து ஓர் ஒண் பொருளாம் தன் சொருபத்து,
யான் எனது என்று ஓதும் இரண்டும் அற, மோனமாத்
துன்றும் அதி சுத்த சுவானுபவ போதமே,
வென்று விளங்குவது மேல்.   (1068)

ஒண்மை - அறிவு, ஒளி, நன்மை, மிகுதி.

11. In that flawless state of Being the Self-Awareness, without a sense of "I" or "mine", the still abidance in and as pure Awareness, this is the noblest victory worth winning.   (1068)
------------------------------

12. அந்நியங்கள் போல் தான் அசத்து அன்றி, எக்காலும்
தன் இயல்பு சத்து ஆம் அத் தன்மையால், மன்னி
நிகழும் அறிவுக்கு நிலைக் களனும், தானே
திகழ் அவ் அறிவு என்றல் தேர்.   (428)

மன்னி - நிலையுற்று.

12. Not like other things unreal, but always by its Being real, the Self as permanent Awareness, has no other dwelling place, than in its own radiant Awareness.   (428)
------------------------------

13. வேறு ஒன்றைச் சற்றும் விரும்பாது, எது தானே
ஊறு இன்று உளன் நான் என்று உள் ஒளிரும், வீறு ஒன்றும்
உண்மை அளவு ஆம் அந் நிருபாதிக உணர்வே,
திண்மை சேர் தன் மெய்த் திறம்.   (1039)

ஊறு - தடை; வீறு ஒன்றும் - திடமான.

13. That which unaided shines within as "I AM, I AM" without a break, the strong, true Being free from all adjuncts, this pure Awareness, is our firm, authentic nature.   (1039)
------------------------------

14. ஆன்மா தனக்கு அவ் அறிவு குணம் அன்று ஆல்,
ஆன்ம உரு நிர்க்குணம் ஆதலால், ஆன்ம
அறிவு செயல் அன்று அகர்த்தத்துவத்தால்,
அறிவு சொரூபமே ஆம்.   (1038)

14. Awareness is not a quality of the Self. The Self is without qualities. Awareness is not an action of the Self. The Self does nothing. The Self, our Being, IS Awareness.   (1038)
------------------------------

15. மற்றவற்றைச் சுட்டி மதித்துப் புறம் போகாது,
உற்ற தன் உண்மை நிலை ஓர்ந்து உளத்து நிற்றலால்,
நான் என்னும் போதம் நழுவப், பிறங்கு சுத்த
மோனமே ஞான முடிபு.   (1194)

பிறங்கு - விளங்கும்.

15. When one refrains from looking out and noting outward objects and instead abides within the Heart in Self-Awareness, the ego disappears. The pure silence that then shines forth is the goal of Knowledge.   (1194)
------------------------------






































The Garland of Guru's Sayings - Selections 1

Guru Vacaka Kovai - குரு வாசகக் கோவை - The Garland of Guru's Sayings is a collection of poems written by Sri Muruganar versifying the oral teachings of Ramana Maharshi, with most of the the verses corrected and proof-read by Ramana Maharshi himself.

Self-Awareness or Self-Inquiry (Atma Vichara) as taught by Ramana Maharshi is a direct and non-dogmatic path to realization. Please see the site by Michael Langford for further details:

Even though Self-Awareness is a direct path, it is quite difficult to grasp. I am greatly benefited by Michael's above web site, the writings of Sri Sadhu Om and Sri Muruganar. Michael has selected a few hundred sayings from Guru Vacaka Kovai on the subject of Turning Inward and has arranged them in 7 sections:
http://www.albigen.com/uarelove/muruganar_turning_inward.htm
Section 2 (here the second blogpost) is "The Ramana Zen", do not miss it!

Michael has used the English translation of Prof. K. Swaminathan with mild editing, rendering verses into prose so as to facilitate an easy read. While reading through it, I felt it would be nice if we could read the original Tamil text along with it - put in a word-split form, with meaning of uncommon words etc., because it is always good to connect with the root text. And this blog attempts the same. In future I will try to add notes from Sadhu Om's Tamil commentary and other existing English translations, wherever I feel they add fine nuances than the simple English translation given below.

Thanks to Michael for his site and his selections from Guru Vacaka Kovai! Thanks to the English translation by Prof. K. Swaminathan! Thanks to Sri Sadhu Om for striving life long to preserve the words of Maharshi and Murugunar! Thanks to Murugunar for preserving the words of Maharshi exactly! And finally, Thanks to Bhagavan Ramana Maharshi for pointing this direct path! Thanks to the many other saints in various religious traditions who have also pointed to this direct path! May all of them help us on the path of Self-Awareness.

A note on the sources: The word-split Tamil text is from the Ramanasramam's book, the meaning of uncommon words are from Muruganar's self-notes from the same book. At times I have referred standard Tamil dictionaries. The commas used as delimiters in the Tamil text are my addition to split up meaningful phrases. The English translation along with the highlights (which have a real meditative flavor) are as in Michael's site:
http://www.albigen.com/uarelove/muruganar_turning_inward.htm#1


Turning Inward - Section 1: Encouragement, the Goal, the Benefits (25 sayings)

1. மிக்க ஞான ஆன்ம விசாரமாம் செந் நெறி வாய்ப்
புக்கார் வழி மாறிப் போதல் இலை, அர்க்கன் என
நேர் இது ஆம், அந்த நெறியே தன் நேர்மையைத் தன்
சாரும் அவர்க்கு உணர்த்தும் தான் .   (393)

1. One who has wisely chosen the straight path of self-inquiry can never go astray; for like the bright clear Sun, the Self-Awareness reveals itself to whomever turns towards it.   (393)
------------------------------

2. எவ் அளவிற்று ஆக இதயத்தே ஆழ்வார், மற்று
அவ் அளவிற்று ஆக அநுபவிப்பார், செவ்வி
விரூபமா நின்று விளங்கும் அகண்ட ஆன்ம
சொரூபமாத்  துன்னு சுகம்.   (451)

செவ்வி - காட்சி, தோற்றம்; விரூபம் - வேறுபாடான வடிவம்.

2. The deeper into the Heart one dives, the greater grows the bliss enjoyed, the intense bliss of the sole Self-Awareness, which once appeared in various forms.   (451)
------------------------------

3. இதயத்தில் உன்னை இனிது ஏற்பித்து விட்டால்
உதயம் ஆம் உண்மை உணர்ச்சி, அதன் பின்
சதோதய மெய்ஞ்ஞான மார்தாண்டனா வாழ்வாய்,
சதாசிவ சாந்த அநுபவம் சார்ந்து.   (452)

ஏற்பித்து விட்டால் - நிலைபெற்று நின்றால்.

3. Once you are well established in the Heart, true Awareness rises bright. Then you live like an un-setting Sun, resplendent with the light of Truth, enjoying the blissful peace of eternal Self-Awareness.
------------------------------

4. அடுக்கத் தகுவது ஞான ஆன்ம விசாரம்,
மடுக்கத் தகுவது தன் மாட்சி, விடுக்கத்
தகுவது அகந்தை மதி, சஞ்சலங்கள் போகப்
புகுவது தன் மூலப் புலம்.   (500)

அடுக்கத் தகுவது - செய்யத்  தகுவது; மடுக்க - அடைய; மூலப் புலம் - ஆன்ம அறிவு.

4. Worth pursuing is self-inquiry, worth enjoying is the infinite Self-Awareness. Worth giving up is the ego-sense. To end all sorrow, the final refuge is one's source, the self of pure Awareness.   (500)
------------------------------

5. கனவில் தாம் செய்ததாக் கண்ட வினை யாதும்,
நனவில் பற்றாதே நழுவும், நனவு எனும் புன்
ஜீவ போதக் கலக்கில் செய்ததும், ஆங்கே சொரூப
தேவ போதத்து ஒழியும் தீர்ந்து.   (554)

5. The deeds we do in a dream do not touch our "waking" life, and slip away when we "awake". Our deeds done in this clouded ego life, disappear and leave no trace, when we wake up, in the divine white light of Self-Awareness.   (554)
------------------------------

6. தடைபடாது எங்கும் தழைத்த இரு வானத்து,
அடைபடாச் சிற்றம்பலத்தை, இடை விடாது
எண் உறுவார்க்கு ஊழ்வினை இன்று எள் துணையும், என்றதே
விண் உறுவார்க்கு இல்லை விதி.   (697)

இரு - பெரிய; விண் உறுவார்க்கு - ஆன்ம ஆகாச சொரூப ஞானம் அடைவோர்க்கு.

6. They say that fate can never bind those heaven-bound. What does this mean? Not an iota of the past can touch those, who dwell unceasingly in the firmament of vast, boundless, border-less, full Self-Awareness.   (697)
------------------------------

7. கழுத்து அணி தான் அந்தக் கழுத்தில் உறச் செய்தே
வழுக்கினாள் போலே, மயங்கிக் கழுத்தில்
தடவிப் பார்த்து அத்தைத் தலைபடலே, தன்னைத்
தடவி உளத்து எய்தும் தரம்.   (884)

வழுக்கினாள் - காணாமல் போக்கினாள்.

7. A woman with a necklace around her neck imagines it is lost, and after a long search elsewhere, touches her own neck and there finds it; even so, the Self-Awareness is here within. Probe for it within and find it.   (884)
------------------------------

8. மன்மப் புலம் துருவும் மார்க்கம் ஒழிந்து, எஞ்சியவாம் 
கன்மம் முதலாய கடப்பாட்டால், என் முயற்சி 
செய்தும் இதயத்துத்  திகழ் ஆன்ம வைப்பைத், தாம் 
எய்துவித்து இன்பு உறுத்தல் இன்று.   (885)

துருவும் - விசாரிக்கும்; கடப்பாடு - காரியம், உழைப்பு; ஆன்ம வைப்பு - ஆன்ம பொக்கிஷம்.

8. Except the path of Self-inquiry, probing the mysterious I-sense, no other effort or action, however strenuously pursued, can take one to the fount of bliss, the treasure shining in the heart, forever as the Self-Awareness.   (885)
------------------------------

9. எண்ணமாச் சிந்தை இயங்காது ஒழிந்தாலும்,
திண்ணமா உண்டு என்று செப்புவேன், உண்மை ஆம்
காலமே ஆகக் கரந்து ஒழுகி, ஞான ஆனந்த
ஆலயமாய் நிற்கும் அது.    (924)

9. I shall assert with certainty that when the mind as thoughts has ceased to function, it remains as a temple of Awareness-Bliss, hidden till then behind the veil of time.   (924)
------------------------------

10. போதமே உண்மைப் புகல் ஆகப் பற்றில், அறும்
பேதைமை சேர் துன்பப் பிறப்பு.   (956)

10. The Goal, the Truth, is Self-Awareness. Reaching it is the annihilation of the painful illusion of birth.   (956)
------------------------------

11. மறவாத போதமே மங்காத மெய் அன்பு
உறவு ஆன பத்தி, ஒழுக்கம், பிறிவு இல் பேர்
இன்ப மயம் ஆக, இயல் சொருப மெய் உணர்வே
அன்பு இயல்பாப் பொங்குவதனால்.   (974)

11. Unbroken Self-Awareness is the true bright path of devotion or love. Knowledge of our inherent nature, as indivisible Supreme Bliss, wells up as love.   (974)
------------------------------

12. உள்ளதை ஓம்பும் உரவோன், எதற்குமே
வெள்கு உறான் சிந்தை விதிர்த்து.   (984)

ஓம்பும் - அனுசந்திக்கும்; உரவோன் - வலிமை உள்ளவன்; வெள்கு உறான் - அஞ்ச மாட்டான்; விதிர்த்து - காலங்கி.

12. The strong one who abides in Being, knows neither fear nor doubt.   (984)
------------------------------

13. சுகம் என்பது ஆன்ம சொரூபமே, ஆன்ற
சுகம் அன்றி இல்லை சொரூபம், சுகம் என்பது
ஒன்றே உளது, அவ் உறுதி உணர்ந்து ஆன்ம நிலை
நின்றே துய் இன்பம் நெடிது.   (1029)

நெடிது - எப்போதும்; ஆன்ற - மாட்சிமைப்பட்ட , விசாலமான.

13. Bliss is the very nature of Self-Awareness. Self-Awareness is infinite Bliss. Knowing this firmly, abide in the Self-Awareness, enjoying bliss forever.   (1029)
------------------------------

14. மகத்தான சாந்த மகோததி ஆம் போத
சுக ஸ்தானம் ஆன சொரூபம், அகத்தே
மனம் தலைப்பட்டு ஆழ மடுத்தார், அடுத்தார்
அனந்த நிதி ஆம் தன் அருள்.   (1059)

மடுத்தார் - மூழ்கியோர்; அடுத்தல் - கிட்டல், சேர்தல்.

14. The Self, the home of blissful Awareness, is a vast ocean of serene peace. He whose mind turns inward and dives deep within it, gains the infinite treasure of its grace.   (1059)
------------------------------

15. இருந்து ஒளிர் மெய் ஞான எழில் மணி ஆம், ஆன்ம
அரும் தனத்தை ஆராய்ந்து, அகத்தே பொருந்தின்
அயா மூலம் ஆம் பிறவி அல்லல் அற, மாயும்
வியா மோகம் என்னும் மிடி.   (1062)

அயா மூலம் - துன்ப காரணம்; வியா மோகம் - பெரும்  மோகம்.

15. The ever-present Self-Awareness, the radiant gem, this is the rarest richest treasure. Look within, and find and hold it fast. Your poverty, the grand illusion, source of every trouble on earth, will vanish without delay.
------------------------------

16. பொக்கம் படாது ஒளிர் சத் போதமே, புத்தி உயிர்
சொக்கும் மனோதீத சொரூபம் ஆம், தொக்க
அதி சா ந்தம் ஆம் அவ் அருட்பரமே, ஓர்க்கும்
மதி சாந்தம் ஆக்கும் மருந்து.   (1069)

பொக்கம் - கறை; தொக்க - திரண்ட.

16. The pure unflawed Awareness of Being is the transcendent state wherein both mind and breath find bliss. This state of supreme grace, surcharged with peace, serves also as the medicine which to the sick, restless mind restores healthful peace.   (1069)
------------------------------

17. அன்புக் கடம் பூண்டு அகத்தே ஒழுகுவார்க்கு, 
இன்ப மயம் பொங்கி மேல் மேல் எழும் காண், இன்பமோடு 
அன்பு சிவம் ஆன்ம அருள் அறிவு சாந்தி வீடு 
என்ப எலாம் தன் மெய் இயல்.   (1077)

கடம் - நெறி.

17. To those who dwell within the Heart, loving the Self-Awareness, bliss comes surging up, mounting ever higher, as love, Self, grace, Awareness, peace and liberation. Bliss is the real nature of the Self-Awareness.   (1077)
------------------------------

18. ஆன்ம சுதந்தரம் சேர் அன்றே, நிரந்தரமாத் 
தான் மகிழ் சேர் சித்த உபசாந்தம் உண்டாம், வான்மய மெய் 
அத்துவிதமான அவ் ஏகாதிபத்தியக் கருத்தூடு, 
எத்துவித ஆசை பயம் இன்று.   (1079)

18. Only when the Self-Awareness is gained, is permanent, perfect, blissful peace attained. In this Self-Sovereignty, non-dual, heaven-like, all pervasive, no desire and no fear can exist.   (1079)
------------------------------

19. தன் இயல்பே ஆகத் தடைபடாது, உள்ளத்து
மன்னிய மெய் அன்புமய வாழ்க்கையே, துன்னிய பொய்ம்
மோக அகங்காரம் முடிந்த, சிவ சொருப
போகமாம் போதப் பொலிவு.   (1091)

துன்னுதல் - நிறைதல்.

19. Abiding as Self-Being, living a life that is steady unhindered flow of true love welling up in the heart, this is the bright, joyous Self-hood, which ends forever the inveterate, false, deceitful ego.
------------------------------

20. அன்புமயம் ஆம் மெய் அறிவு உணர்ச்சி தோய்ந்த அகத்து, 
இன்பமயம் பொங்கி எழுவது ஆம், துன்ப மயல் 
வேட்கை அங்கு இல்லை, விசுத்த சொரூப இயல் 
வாழ்க்கை, அது சாந்தமயம்.   (1093)

வேட்கை - ஆசை.

20. That Heart which truly knows the Self-Awareness, is full of love whence Supreme Bliss wells up forever. There, desire and its shadow, sorrow have no place. Such a life, whose nature is pure, flows serenely calm from Being.
------------------------------

21. மறி கடலோடு ஒன்றா மருவும் நதி, மாறிப் 
பிறிபடுதல் இல்லாத பெட்பே, அறிவு உரு ஆம் 
ஆன்ம சொரூபம் அடைந்த உயிர்க்கு, இல்லை 
தான் மயங்கி மீண்டும் சனிப்பு.   (1121)

21. The river that has merged in the ocean, will never lapse again into separateness. No more will he who has reached his Being as Awareness, forget the Self and be reborn.   (1121)
------------------------------

22. முன் ஒரு கால் மூல முடிச்சு அவிழப் பெற்றானேல,
பின் ஒரு காலத்தும் பிணைபடான், தன் இயல்பு ஆம்
ஈதே இறைமை நிலை, ஈதே திறல் ஆட்சி,
ஈதே உபசாந்தம் எண்.   (1124)

22. If once the primal knot is cut, never again can one be bound, for this is one's natural Being. This is the divine state, this is the supreme power, this is the serene peace.
------------------------------

23. களம் ததும்பும் மாயக் கருத்து அழிந்து, வான் போல் 
உளம் திறந்து, பொங்கும் ஒளியால் தெளிந்த 
உபசாந்தம் உற்ற இடத்து, உள் சுரக்கும் அன்பே, 
சிவம் ஆர்ந்த மெய்ப் பத்திமை.   (1209)

23. When, the dense darkness of ignorance is gone, the Heart's wide open firmament is filled with serene, clear, bright peace, and an inner fount of love springs up, which is true devotion, the pure auspiciousness of Self-Awareness.   (1209)
------------------------------

24. மீந்ததாய் யாது விளங்குமோ, போதமய 
சாந்தமாம் அதே சதாசிவம் ஆம், ஆர்ந்த பரம் 
ஆன அதுவே அகம் என்று, அகந்தை அற்ற 
மோனமே முத்தி முடிபு.   (1222)

24. That which alone abides and shines as pure Awareness, perfect peace, is the Eternal Self, egoless silence, the supreme state of Being That, this is the fullness of liberation.   (1222)
------------------------------

25. விவகாரத்தால் விளையும் வில்லங்கம், சற்றும் 
அவிகார ஆன்மாவை அடையாது, அவகாச 
வானம் கதுவாது, மண் நீர் தீக் கால் அவற்றின் 
ஊனம் தினைத் துணையும் ஓர்.   (906)

அவகாசம் - இடம்; கதுவாது - பற்றாது; கால் - காற்று; தினைத்துணையும் - சிறிதளவும்.

25. The troubles that result from change, can never touch the Self-Awareness, as changes and flaws in earth, water, fire and air, do not affect the element ether, which pervades and transcends them all.  (906)
------------------------------