Saturday, October 10, 2015

The Garland of Guru's Sayings - Part 02

குரு வாசகக் கோவை 

The Garland of Guru's Sayings

முதலாவது - தத்துவ ஆராய்ச்சி இயல் 

Part I - The Quest

1. உலகு உண்மைத் திறன் 

Actuality of the World

காரணமே காரியமாக் காண்டலால் சாத்திரங்கள்
பேர் உருவம் மாத்திரமாப் பேசல் உறும் பேர் உலகக்
காரணமாம் சின்மயம் தான் கைந்நெலி மெய் ஆதலினால்
பேர் உலகம் மெய் எனவே பேசு.   (19)

From cause alone proceeds effect.
The big world, which the scriptures say
is only names and forms, proceeds
from pure Awareness which is real,
clear as the berry in one's palm.
Hence, you may say this big world too
is real.   (19)

மூ ஏழ் உலகு முதல் காரணம் நோக்க
ஓவாது உள ஆற்றால் உண்மையாம் தாவாத
காரியம் ஆம் பேர் உருவம் காணுங்கால் காரணமும்
பூரணம் ஆம் சூனியமே போன்ம்.   (20)

ஓவாது - இடைவிடாது; தாவாத - ஒழியாத.

Considering that the primal cause
of all three or all seven worlds
exists unbroken, all these worlds
have also some reality.
But when this form derivative
is viewed as infinite and eternal,
the ground, the whole, Awareness pure,
seems to be non-existent, void.   (20)

ஈசன் படைப்பாம் எதிரில் புலப்படூஉம்
காசினி மெய்யாகக் களிப்பார்க்கு பாச
மயல் கற்பனையாம் மனோ மாத்திரமே
துயக்கு அறு தன்மெய்த் துணிவு உற்றோர்க்கு.   (21)

காசினி - உலகம்; துயக்கறு - தடை அற்ற, பந்தம் அற்ற.

For those who take the world appearance
as real and enjoy it, it is
the Lord's creation. But for those
who free from fear have known the Truth,
the undeluded Self, it is
no more than a mere mental image
projected by desire.   (21)

சொச்ச பரமான்ம சொரூபத்தில் ஐம்புலமாம்
துச்ச உரு நாம சக தோற்றம் அந்தச் சத் சித்
சொரூபம் அதில் கற்பிதமாய்த் தோற்றும் மன மாயைத்
திருவிளையாட்டு என்றே தெரி.   (22)

சொச்ச - ஸ்வச்ச, சுத்த.

The world of trivial names and forms
perceived by the five sense is
a mere appearance in the Self,
Awareness pure. It is sport
of maya, of images projected
by the mind, itself a thought
arising in Being-Awareness.   (22)

இறைவனது திட்டியிலே இல்லா உலகை
நிறைபடு மெய்யாக நிகழ்த்தார் நிறைந்த
அறிவு உருவாம் தன்னை அலால் அன்னியமா ஒன்றை
அறியா அறிவினர்.   (23)

Seers who know the Self as pure
Awareness know that nothing but
the Self exists. They cannot treat
as wholly real the world that has
no being in the sight of the God supreme.   (23)

இலவு காத்திட்ட கிளி என்றே புலன் ஆம்
உலகு பொருளாக் காத்து உழல்வோய் உலகு
புலப்படலால் மட்டும் பொருளேல் பொருள் ஆம்
புலப்படலால் கானல் புனல்.   (24)

Like the hopeful parrot hovering
round the silk-cotton tree's red flower,
you yearn, my friend, for the world of sense,
mistaking it for something real.
If seeming be the same as being,
then, sure, the mirage in the desert
would be water.   (24)

தோற்றத்தை மெய்யாத் தொடராதே காண் சொருபத்
தேற்றத்தை நீங்கித் திகைத்து நீ தோற்றம்
கரப்பதால்  மெய் அன்று காண்பான் சொரூபம்,
கரப்பது அன்று மெய் அதுவே காண்.   (25)

தேற்றம் - அறிவு; கரப்பது - மறைந்து போதல்.

From your true being as Awareness
alienated and deluded
do not pursue appearances,
deeming them as real. They
are false, since disappear they must.
But your own being as Awareness
is real and cannot cease to be.   (25)

மாயா விகார மனப் புலத்துக்கு அல்லால் அம்
மாயா விகார மனத்துக்குத் தாய் அகமா
நின்ற தனக்கு நிகழாது இருக்குங்கால்
ஒன்றுமோ உண்மை உலகு.   (26)

நிகழாது - விளங்காது.

The world by the illusive mind
perceived is not by the mind's source,
the Self, perceived. How can it, then,
this poor world, claim reality?   (26)

சொப்பனமே ஆக மருள் சூனியத்தே தோற்றிடும் இவ்
அற்ப சமுசாரம் கண்டு அஞ்சாதீர் சித்பர மெய்ந்
நேசக் கருத்தூடு நில்லாது கார் இருள் சேர்
பாச மனக் கற்பனை.   (27)

Be not afraid of this base, trivial
Samsara which, like dreams in sleep,
appears in nescience. A dark shadow
caused by mind's desires it cannot
stand the true, loving splendour of
pure Awareness.   (27)

உலகத்துக்கு அஞ்சி ஒடுங்குவீர் உள்ள
உலகத் தலம் ஒன்றும் இல்லை புலன் ஆகும்
பொய்ச் சகத்துக்கு அஞ்சல் புரி கயிற்றில் பொய்ப்  பாம்புக்கு
அச்சம் உறுத்தல் அனைத்து.   (28)

Ye who in fear shrink from the world,
know that the place has no existence.
Fear of this phenomenal world
is like being frightened by a rope
mistaken by you for a snake.   (28)

சங்கற்பத் தோற்றம் உள சாக்கிரத்தும் சொப்பனத்தும்
பங்கம் அற இவ்வுலகம் பார்ப்பது அலால் சங்கற்பம்
கிஞ்சித்தும் தோற்றாத கேவலத்துக் காண்பது உண்டோ
சங்கற்பம் தான் உலக சத்து.   (29)

பங்கம் - கேடு, ஐயம்; கேவலம் - தூக்கம்.

The world appears distinctly only
in wakefulness and dream with concepts
filled. In concept-free, all empty
sleep, one see no world; so then
conceptual is the world's whole substance.   (29)

சிந்தனையின் மாட்சியே தேறும் உலகம் எனில்
சிந்தனை இல்லாது அமைதி சேர் பொழுதும் முந்து எனவே
சொற்பனம் போல் ஏனும் எதிர் தோன்றல் அது முற்பட்ட
கற்பனை வேகத்தாலே காண்.   (30)

மாட்சி - விளக்கம்; தேறும் - காணப்படும்; முந்து என - மேல் எழுந்து வருவதாய்.

The world we see so clearly is only
thought-projected. If sometimes
the world appears before us dream-like
in samadhi thought free too,
it is only the persistent power
of images already formed.   (30)

வாயுள் இருந்தே வலை நூல் வெளிப்படுத்தி
வாயுள் அதை மீள வயப்படுக்கும் மாயச்
சிலந்தி போல் இவ்வுலகைச் சிந்தையும் தன் உள் நின்று
அலர்ந்தே அகப்படுக்கும் ஆல்.   (31)

சிந்தை - மனம்; அலர்ந்து - வெளிப்படுத்தி.

Even like the spider spreading out
its web from its own mouth and then
withdrawing it into itself,
the mind, which brings out blossom-like
the world, ingathers it again.   (31)

உந்தப் படுவ உருப் பெயர் தாம் உள் நின்றே
சிந்தை பொறி மூளை வழிச் சேருங்கால் சிந்தை
இதயத்தே தங்கி இருக்குங்கால் மீளப்
புதைவன ஆங்கே அவை உள் புக்கு.   (32)

When the mind through the brain and senses
outward turns, the names and forms
are from within thrust out. And when
the mind at rest abides within
the Heart, they enter and lie buried
there again.   (32)

பேர் உருவத்தாலே பிணங்கும் பிரபஞ்சம்
பேர் உருவம் பேர்ந்தால் பிரம்மம் ஆம் பேர் உருவக்
கற்பனையால் உண்மைக் கடவுளை மீப்போர்த்து உலகா
அற்ப மதி தான் மருள்கின்றான்.   (33)

பிணங்கும் - பேதப்படும்; மீப்போர்த்து - மேலே மூடி.

By names and forms the universe
is split into objects. When
these names and forms are whisked away,
Pure Being, Brahman, abides. Concealing
God with these conceptual 
names and forms, the poor fool is
deluded into seeing a world
of which, alas, he is afraid.   (33)

தன்னை உடலாத் தடுமாறும் புந்தியே
துன்னும் பெயர் உருவத் தோற்றமாம் மின் உலகை
உண்மை போல் வேட்பித்து உறு பாச பந்தத்துள்
துண் என்று அகப்படுத்தும் சூது.   (34)

துன்னும் - பொருந்துகின்ற; மின் - கணம் மட்டும் தோன்றுகின்ற;
வேட்பித்து - ஆசைபடுத்தி; உறு - வலிய; துண் என்று - திடீர் என்று.

The mind bewildered which makes
the body for oneself conceives
the transient world of names and forms,
makes it seem real and lovable,
and promptly entraps one in the strong,
illusive bondage of desire.   (34)

செறியும் கன சொருப திட்டியிலே இல் பொய்
அறிவின் சுழல் வட்டம் ஆகும் அறிவின்
இலகும் அவதானத்து இருமையொடு மும்மை
உலக விவகாரம் உணர்.   (35)

செறியும் - பரிபூரண; சுழல் வட்டம் - கொள்ளி வட்டம்; அவதானம் - நினைப்பு; இருமை - இரட்டைகள்; மும்மை - முப்புடிகள்.

The empirical world of jostling names
and forms is false and has no real
existence in bright, full Awareness.
Like a ring of fire formed in the dark
when one whirls fast a glowing joss-stick,
'tis an illusion, mind-created.   (35)

நீதமொடு சான்றோர் நிகழ்த்தும் பரஞான
போதனை தேறா உலகப் புந்தியோய் வாதனையின்
சூது காண் உள்ளபடி சோதிப்பின் மா மோக
ஊது காமாலை உலகு.   (36)

ஊது - பெருத்துக் காண்கின்ற.

O worldly-minded fool who cannot
understand the proper teachings
of great sages, this whole bloated
world beheld by jaundiced eyes,
when closely scanned, is but a trick
played by your own vasanas, nothing more.   (36)



No comments: