குரு வாசகக் கோவை - The Garland of Guru's Sayings
1. குரு வணக்கம் - Invocation to the Guru
அருள் அவாவால் மேல் அலந்து படாது உள்ளம்தெருள ஆன்மாவாத் திகழும் மருள் அவாய்
நின்ற யான் என்னது எனும் நீச மனப்பான்மை அறத்
துன்று குரு போதச் சுடர். (1)
அலந்து படாது - தளர்வு அடையாது; மருள் அவாய் - மயக்கம் கொண்டு; துன்று - பொருந்துகின்ற, சேருகின்ற.
To save from dire despondency
those who yearn for, and yet are far,
far from the goal of final Freedom,
this Lamp of Guru's wisdom lit
to put to flight the illusion of "I"
and "mine", shines as the very Self. (1)
உடல் உருவாப் பேதுற்று உழன்றேனை ஊத்தைச்
சட உரு நான் அன்றாகத் தள்ளிக் கெடல் அரு மெய்ஞ்
ஞான குருவாக நயந்து ஆண்ட நல்ல அருள்
மோன குரு பாதம் முடி. (2)
பேதுற்று - மயங்கி.
While I lay writhing in the body
mistaking it for me, the gracious,
silent guru took pity on me,
and made me see that I was not
this form inert, decaying, but
imperishable true Awareness.
With His twin feet I crown my head. (2)
மிக வேறுபட்ட விவாதங்கட்கு எல்லாம்
தொகவே சமரசமாத் தோன்றத் தகவே
சமர்த்தித்து மெய்ப்பொருளைத் தந்து உரைக்கும் போத
சமர்த்த குரு பாதம் தலை. (3)
தகவே - தக்கவாறு.
The Sage accomplished who reveals
with clarity and certitude
the ultimate Truth which reconciles
all the discordant creeds and doctrines,
His Feet my head wears as a crown. (3)
2. நூல் பெயரும் தோற்றமும் - Name and Genesis of this Treatise
தெளிந்த பரமார்த்த தீபம் ஈது உண்மைஒளிர்ந்திடக் காணாத உளத்தேன் இளந்தை
அறிவால் கொளுத்தியது அன்று ஆண்ட ரமணன் மூது
அறிவால் கொளுத்தியது ஆம். (4)
இளந்தை - பக்குவ முதிர்வு அற்ற.
Not my poor mind unlit by any
vision of Truth, but Master Ramana's
bright, eternal wisdom, is
the flame that shines clear in this Lamp of
Being Supreme. (4)
ஒளிர் மெய் உணர்வு ஆக உள்ளத்தே தானாக்
கிளர் சொருபம் ஆன அருள் கேள்வன் தளர்வு அறவே
சாற்றிய பல் போதனையுள் சார்ந்த சில ஞாபகத்தில்
போற்றி உரைக்கின்றேன் புலத்து. (5)
The gracious Master, the embodiment
of the one bright, true Being-Awareness
uttered many sayings for dispelling
ignorance. Some of these I treasured
in my memory and repeat
here in this treatise. (5)
எங்கிருந்தே ரமணன் என்னை அணைந்தானோ
அங்கிருந்தே நானும் அவ் ஆண்டானோடு எங்கள்
ஒருமித்த வாழ்வில் உணர்ந்த பரமார்த்த
தருமத்தை ஓதுவேன் சற்று. (6)
In the non-dual state, wherein
abiding Ramana made me his,
where he and I together shared
a common being, I learnt the Truth
supreme, transcendent, which I hope
here to expound a little. (6)
முளைத்த அகந்தை மதி மோகம் அற என்னைத்
தெளித்த ரமண குருதேவன் அளித்த அருள்
பார்வையால் கண்ட பரமார்த்த பாவம் ஒரு
கோவையாக் கோப்பேன் குறித்து. (7)
தெளித்த - தெளிவித்த.
My god, my guru, Ramana cleared
my mind of the dense ego-cloud
and graciously revealed to me
the Truth transcendent. 'Tis this vision
splendid that with loving care
I weave into this garland fair. (7)
3. நூல் பயன் - Purpose of this treatise
அனைத்துமாய் நின்ற பரமான்மாவுக்கு எய்தல்எனைத்துமே இன்றாம் எனவே மனத்துத்
தரும அர்த்த காமச் சலனம் அறக் காண்டல்
பரமார்த்த தீபப் பயன். (8)
The Self supreme stands ever as all
things everywhere, one does not reach it.
This Lamp of Being supreme only
reveals what IS, free from all waves
of dharma and kama. (8)
சுக சொருபமாகச் சுடரும் தன் மெய்யே
இக பரங்கட்கு எல்லாம் இடமாம் தகவால்
கதி எலாம் எண்ணிக் கலங்காது தன்னில்
பதிதலாம் இந் நூல் பயன். (9)
The Self, pure Being that shines as Bliss,
is the sole home of all the worlds
here and hereafter. Prompt and proper
restoration of the Self
is what this treatise offers, not
ways dubious to some distant goal. (9)
4. அவை அடக்கம் - Author's humble apology
சந்தக் குரு வாசகக் கோவை தேருங்கால்மந்த மதி படைத்த மத்தனேன் புந்தியால்
எண்ணி இசைத்தது அன்று எண்ணாது இசைப்பித்தோன்
புண்ணியனாம் வேங்கடவன் போன்ம். (10)
"Garland of Guru's Sayings", this rhyming
treatise was not thought out or sung
by me, this half-wit. Venkata,
the pure one, thought-free sang, it seems,
and so it came to be. (10)
யான் என் போதத்தால் எழுதாக் கிளவிக்கு
யான் ஏன் இயம்பல் அவை அடக்கம் மோன
சமாதியால் உள்ளத்துள் சான்றோர் தேர் அந்தப்
புமனதே இந்நூல் பொறுப்பு. (11)
கிளவி - சொல், நூல்.
For what I have not with my mind
composed, why humbly apologize?
Responsibility for this
whole treatise rests with Him, the Master
known in the pure heart's blissful silence. (11)
5. சமர்ப்பணம் - Dedication
பேது கடிந்து என்னை இப் பேறு பெறுவித்தாள்ஆதலின் நன்றாக அடைவித்தேன் சூது வாது
ஏதும் அறியாத ஈன்றாள் திரு உளத்துக்கு
ஈது சமர்ப்பணம் ஆக என்று. (12)
She gave me birth and gave me thus
freedom from ignorance, bliss eternal,
to this most innocent mother of mine,
to her dear memory is this treatise
duly dedicated. (12)
6. ஆக்கியோன் - The Author
குரு வார்த்தை சிற்சில ஓர் கோவையாக் கோத்துப்பரமார்த்தமாகப் பகர்ந்தான் சருவ அர்த்த
வண்ணமும் அவ் ஆண்டான் வளர் கழலே ஆக அருள்
கண்ணினில் காண் கண்ண முருகன். (13)
Some sayings of the guru, Kanna
Muruga stored and strung together
as a garland bright of Being supreme.
His Eye of grace, at his Master's Feet,
had found the meaning, beauty and bliss
of all this universe. (13)
முதலாவது - தத்துவ ஆராய்ச்சி இயல்
Part I - The Quest
மங்கலம் - Invocation
நீர் சூழ் நில மகள் செய் நீதப் பெருந் தவத்தால்
பேர் சான்ற சுத்தப் பிரம்மமே சீர்சால்
சகளம் கொள் சீரமண சற்குரு சத் போத
அகளங்க பாதம் அகம். (14)
நீத - தகுந்த; அகளங்க - பரிசுத்த.
The ocean-girdled maiden Earth's
hard, long penance has borne fruit,
Pure Being, glorious Siva Himself,
embodied in human form as Guru
Ramana of flawless wisdom
has come to us. Let us in the heart
cherish His sacred Feet. (14)
எல்லாப் பொருட்கும் இதயமா நின்ற ஒரு
சொல்லான சுத்த சொரூபமே கல்லார்
மயல் அகற்றும் ஞான குரு வாசகக் கோவைக்கு
நயன் அருளும் நல் மங்கலம். (15)
One of the benediction fits
this Garland of Guru's Sayings, which
seeks to dispel delusion. That
one word is "I", the Self, abiding
in every being as the Heart. (15)
ஞானமயச் செம்பொருளாம் தன்மெய் அநுபவம் தான்
மோனமயப் பண்பால் முயங்குவதாய் நான் எனும் பொய்த்
தன்மை அதன் மெய்யாய்த் தழைத்து ஒளிரும் சுத்த பரத்
தன்மயமாம் தாளே தலை. (16)
Awareness pure, true Being shining
in silence, Self-experience of
the real I behind the false,
conceptual "I", is God transcendent,
with His Feet we crown our heads. (16)
உள் உறவு கொண்டார்க்கு உவட்டல் உறாது ஆர்வம் எழும்
தெள்ளு பரம ஆனந்தத் தீம் கனியாய் உள்ளம் உறத்
தூண்டா மணி விளக்காய்த் தூங்காதே தூங்கு உண்மை
ஆண்டான் அருளே பொருள். (17)
To those who look within, the highest
good gained by the Master's grace
is wakeful sleep, the turiya state,
the undying flame, the sweet, uncloying
fruit forever fresh. (17)
உறவு ஒழிவு கூடா உளம் உடையான் ஞானத்
துறவு அழகு வாய்ந்த சொரூபன் மறவி
அலக்கண் அற ஆண்டான் அடிகளே உண்மை
இலக்கணங்கட்கு எல்லாம் இலக்கு. (18)
மறவி - பிரமாதம்; அலக்கண் - துன்பம்.
Heart free from liking and disliking,
form comely with the comeliness
of perfect wisdom, He, my Master,
the goal of all true goodness, has
destroyed my ignorance and fear.
His Feet are my last refuge. (18)
No comments:
Post a Comment